For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இலங்கை செல்கிறார் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி

By Mathi
Google Oneindia Tamil News

கொழும்பு: அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி மே 2-ம் தேதி இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறார். ஜான் கெர்ரி வெளியுறவு அமைச்சரான பிறகு இலங்கை செல்வது இதுவே முதல்முறை.

ராஜபக்சே ஆட்சி காலத்தில் நடைபெற்ற இனப்படுகொலை குற்றச்சாட்டில் ஐ.நா. மனித உரிமை குழு மூலம் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா பல நடவடிக்கைகளை மேற்கொண்டது. தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு சிறிசேன தலைமையிலான அரசு அமைந்துள்ளது.

John Kerry to make historic trip to Sri Lanka

அத்துடன் ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் கொண்டுவருவதை அமெரிக்கா தற்போது ஒத்தி வைத்துள்ளது. இந்நிலையில் அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி இலங்கை பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

வரும் மே 2-ந் தேதி ஒருநாள் ஒரு நாள் மட்டும் இலங்கையில் தங்கியிருக்கும் அவர், அந்நாட்டு அதிபர், பிரதமர் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களை சந்திக்கிறார். அவரது பயணம் குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் அமைதி, அரசியல் நிலைத்தன்மை, வளர்ச்சி ஆகியவற்றுக்கு அமெரிக்கா ஆதரவாக இருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
US Secretary of State John Kerry will make historic first official visits to Sri Lanka on May 2.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X