For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கொழும்பில் ராஜபக்சேவுடன் இந்திய பாதுகாப்புத் துறை செயலர் மாத்தூர் சந்திப்பு

By Mathi
Google Oneindia Tamil News

கொழும்பு: இலங்கை சென்றுள்ள இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சக செயலாளர் மாத்தூர் அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபக்சேவை இன்று சந்தித்து பேசினார்.

Krishna Mathur meets President Rajapaksa

இலங்கையுடனான பாதுகாப்பு தொடர்பான பேச்சுவார்த்தைக்காக மாத்தூர் தலைமையிலான இந்திய குழு கொழும்பு சென்றுள்ளது. மாத்தூருடன் பாதுகாப்பு அமைச்சக இணை செயலர் ராம் சுகாஹ் சிங், வெளியுறவுத் துறை அமைச்சக இணை செயலாளர் சுசித்ரா துரை ஆகியோரும் கொழும்பு சென்றுள்ளனர்.

இக்குழுவினர் இன்று இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவை சந்தித்து பேசினர். இச்சந்திப்பின் போது, இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கப்பட்டு வருவது குறித்து ராஜபக்சேவிடம் மாத்தூர் விவரித்தார்.

மேலும் இந்திய மீன்பிடி படகுகளால் இலங்கை மீன்வளம் பாதிக்கப்படுவதாக மாத்தூர் குழுவிடம் ராஜபக்சே புகார் தெரிவித்தார். இருதரப்பும் பேச்சுவார்த்தை மூலமாக தீர்வு காண வேண்டும் என்று இந்த சந்திப்பில் தீர்மானிக்கப்பட்டது.

English summary
R. Krishna Mathur the Indian Defence Secretary who is on a visit to Sri Lanka met with the President Mahinda Rajapaksa.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X