For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியா? ஜூலை 1-ல் மகிந்த ராஜபக்சே அறிவிப்பு

By Mathi
Google Oneindia Tamil News

கொழும்பு: இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே ஜூலை 1-ந் தேதி அறிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இலங்கையில் கடந்த ஜனவரி மாதம் அதிபர் தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் மகிந்த ராஜபக்சே தோல்வி அடைந்தார். புதிய அதிபராக மைத்ரிபால சிறிசேன பொறுப்பேற்றார்.

Mahinda Rajapaksa to make announcement on July 1 on Parliament election

அதன் பின்னர் இலங்கை அரசியலில் இருந்து மகிந்த ராஜபக்சே ஒதுங்கியிருந்தார். இந்நிலையில் இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. இத்தேர்தலில் மகிந்த ராஜபக்சே போட்டியிட்டு மீண்டும் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றக் கூடும் எனவும் கூறப்படுகிறது.

ஆனால் மகிந்த ராஜபக்சேவை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க முடியாது என அவரது சுதந்திர கட்சி அறிவித்துவிட்டது. இந்நிலையில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஜூலை 1-ந் தேதி மகிந்த ராஜபக்சே அறிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தங்கல்ல மெதமுலன்னையில் உள்ள தமது வீட்டில் இருந்து இதற்கான அறிவிப்பை ராஜபக்சே வெளியிட உள்ளார்.

English summary
Former Srilanka President Mahinda Rajapaksa would make an official statement to the public on his stance of contesting at the Parliamentary Elections.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X