For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

என்னது ராஜபக்சே குடும்பத்தின் காலை டிபன் செலவு மட்டும் ரூ18.8 கோடியா?

By Mathi
Google Oneindia Tamil News

கொழும்பு: இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே குடும்பத்தினர் இந்திய ரூபாயில் ரூ18.8 கோடிக்கு காலை உணவை சாப்பிட்டதாக இலங்கை முன்னாள் எம்.பி நலீன் பண்டாரவை மேற்கோள்காட்டி சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்ட செய்தி பரபரப்பை கிளப்பிவிட்டது.

இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே ஆகஸ்ட் 17-ந் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளார். இதனால் தற்போது ராஜபக்சே இலங்கை ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக அடிபடுகிறார்..

Mahinda’s Rs. 9.4 m unpaid Hilton breakfast bill Fee?

இந்த வகையில் 'sinhayanews' என்ற சிங்கள இணையதளம் 'ராஜபக்சே குடும்பத்தின் காலை உணவு செலவு ரூ94 மில்லியன்' என்ற தலைப்பில் இலங்கை முன்னாள் எம்.பி நலீன் பண்டாரவை மேற்கோள்காட்டி பகீர் செய்தி வெளியிட பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு ஆதாரமாக ஹில்டன் ஹோட்டல் கொடுத்த 'பில்' ஒன்றும் வெளியிடப்பட்டது. அத்துடன் இந்த பணத்தை ராஜபக்சே குடும்பம் செலுத்தவில்லை எனவும் குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

ஆனால் அந்த ஊடகம் ஆதாரமாக வெளியிட்டிருப்பது "காமன்வெல்த் மாநாடு நடைபெற்ற 15.11.2013ஆம் நாளன்று காலை உணவுக்கான கொட்டேஷன் தான் என்றும் 11.11.2013ஆம் தேதி அது அனுப்பி வைக்கப்பட்டது என்றும் ராஜபக்சே தரப்பினர் கூறி பரபரப்பை ஓய வைத்துள்ளனர்.

ராஜபக்சே அன் கோவுக்கு எல்லாமே இனி 'ஓயாத அலைகள்'தான்!

English summary
UNP MP Nalin Bandara has revealed that former President Mahinda Rajapaksa’s family had ordered breakfast worth Rs. 9.4 million from the Hilton and not paid the bill during CHOGM.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X