For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஐயா, என் குடும்பத்தை வழக்குகளில் இருந்து காப்பாத்துங்க: சிறிசேனா காலில் விழுந்த ராஜபக்சே

By Siva
Google Oneindia Tamil News

கொழும்பு: தனது குடும்பத்தாருக்கு எதிராக தொடரப்படும் வழக்குகளில் இருந்து தங்களை காப்பாற்றுமாறு இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சே தற்போதைய அதிபர் மைத்ரிபால சிறிசேனாவின் காலில் விழுந்து கெஞ்சியதாக கூறப்படுகிறது.

மூன்றாவது முறையாக இலங்கை அதிபராக வேண்டும் என்ற ஆசையில் ராஜபக்சே முன்கூட்டியே தேர்தலை நடத்தினார். ஆனால் தேர்தலில் மைத்ரிபால சிறிசேனா வெற்றி பெற்று அதிபர் ஆனார். சிறிசேனா ஆட்சிக்கு வந்த கையோடு ராஜபக்சே காலத்தில் நடந்த முறைகேடுகள், ஊழல்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

இது தொடர்பாக ராஜபக்சேவின் சகோதரர் பசில், அவரது ஆதரவாளர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ராஜபக்சே

ராஜபக்சே

ராஜபக்சே புதன்கிழமை மதியம் இலங்கை நாடாளுமன்ற வளாகத்தில் இருக்கும் அதிபரின் செயலகத்திற்கு சென்று அங்கு சிறிசேனாவை சந்தித்து சுமார் 2 மணிநேரம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

கெஞ்சல்

கெஞ்சல்

ஊழல் குறித்து வழக்குகள் தொடர்ந்தால் இனி தேர்தலில் போட்டியிட முடியாத நிலைமை ஏற்படும் என்பதை மனதில் வைத்து ராஜபக்சே சிறிசேனாவின் காலில் விழுந்து தன்னையும், தனது குடும்பத்தாரையும் வழக்குகளில் இருந்து காப்பாற்றுமாறு கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.

மறுப்பு

மறுப்பு

தனது ஆதரவாளர்கள், குடும்பத்தார் மீதான ஊழல் விசாரணைகளை நிறுத்துமாறு ராஜபக்சே சிறிசேனாவை கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால் அவரது கோரிக்கையை ஏற்க சிறிசேனா மறுத்துவிட்டதாகத் தெரிகிறது.

பிரதமர் வேட்பாளர்

பிரதமர் வேட்பாளர்

சுதந்திரா கட்சியின் தலைவராக உள்ளவர் சிறிசேனா. அதே கட்சியின் மூத்த ஆலோசகராக இருப்பவர் ராஜபக்சே. இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் ராஜபக்சே போட்டியிட சிறிசோனா ஒப்புதல் வழங்கியபோதிலும் பிரதமர் வேட்பாளரை தேர்வு செய்வதில் மக்களின் கருத்துகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

தொழில் அதிபர்கள்

தொழில் அதிபர்கள்

ராஜபக்சே தான் அதிபராக இருக்கையில் தமிழ் மற்றும் சிங்கள தொழில் அதிபர்கள் பலரை மிரட்டி பணம் பறித்துள்ளார். தற்போது அவர்களில் சிலர் ராஜபக்சே தங்களை மிரட்டி பணம் பறித்ததற்காகன ஆதாரங்களை முக்கிய அரசு அதிகாரிகளிடம் அளித்துள்ளார்களாம். இது தொடர்பாக அரசு நடவடிக்கை எடுத்தால் ராஜபக்சே, அவரது மனைவி, மகன் உள்ளிட்டோர் கைதாகும் நிலை ஏற்படும். இந்த சூழலில் தான் ராஜபக்சே சிறிசேனாவை சந்தித்து கெஞ்சியுள்ளார்.

English summary
Former Sri Lankan president Rajapakse has met his successor on wednesday and reportedly begged him to relieve him and his family from the scam cases.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X