For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இலங்கையின் பிரதமராக 4வது முறையாக பதவியேற்றார் ரணில்- விழாவில் மகிந்த ராஜபக்சேவும் பங்கேற்பு!

By Mathi
Google Oneindia Tamil News

கொழும்பு: இலங்கையில் 4வது முறையாக பிரதமராக ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கே பதவியேற்றார். அதிபர் மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் அவர் பதவியேற்றுக் கொண்டார். இப்பதவியேற்பு நிகழ்ச்சியில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவும் கலந்து கொண்டார்.

இலங்கை நாடாளுமன்றத்துக்கு கடந்த 17-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் ரணிலின் ஐக்கிய தேசிய கட்சி 106 இடங்களில் வென்று வெற்றி பெற்றது. மகிந்த ராஜபக்சேவை முன்னிறுத்திய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 93 இடங்களைக் கைப்பற்றியது.

Ranil Wickremesinghe sworn in as Srilanka Prime Minister

இதனைத் தொடர்ந்து ரணில் ஆட்சி அமைக்க சிறிசேனவின் சுதந்திர கட்சி ஆதரவு அளித்தது. இதனால் இலங்கையில் ரணில் தலைமையில் தேசிய அரசு அமைய உள்ளது.

இந்நிலையில் இலங்கை நாடாளுமன்றத்துக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 196 எம்.பி.க்களின் பட்டியல் நேற்று இரவு கெஜட்டில் வெளியிடப்பட்டது. எஞ்சிய 26 நியமன எம்.பி.க்கள் விவரம் பின்னர் வெளியிடப்பட இருக்கிறது.

Ranil Wickremesinghe sworn in as Srilanka Prime Minister

இதன் பின்னர் இன்று கொழும்புவில் அதிபர் மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் இலங்கையின் பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே பதவியேற்றார். அவர் 4வது முறையாக பிரதமராக பதவியேற்றுள்ளார். ரணில் பதவியேற்பு நிகழ்ச்சியில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதற்கு முன்னர் 1993, 2001 மற்றும் 2015ஆம் ஆண்டுகளில் ரணில் பிரதமராக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
UNP leader Ranil Wickremesinghe is sworn in as Sri Lanka's Prime Minister for a fourth term today at the Presidential Secretariat.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X