For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிரபாகரன் குறித்து இன்று வெளியாகும் இலங்கை ராணுவ தளபதியின் நூலில் பரபரப்பு தகவல்கள்? #ltte

By Mathi
Google Oneindia Tamil News

கொழும்பு: இலங்கை ராணுவத்தின் சர்ச்சைக்குரிய ராணுவ தளபதி மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன எழுதிய 'நந்திக் கடலுக்கான பாதை (Road to Nandikadal) என்ற நூல் இன்று வெளியிடப்படுகிறது. இதில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் குறித்த புதிய தகவல்கள் இடம்பெறக் கூடும் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இலங்கை இராணுவத்தின் தளபதியான மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன நேற்று ஓய்வு பெற்றார். இவர் 2009-ம் ஆண்டு இறுதிக்கட்டப் போரின் போது 53 ஆவது டிவிசனுக்குத் தலைமை வகித்தவர்.

Road to Nandikadal : New Book on Vanquished Tigers

இவரது தலைமையிலான படைப்பிரிவுடனான இறுதிச் சண்டையிலேயே தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரிழந்தார் எனக் கூறப்பட்டு வருகிறது. மேலும் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் படுகொலை உள்ளிட்ட போர்க்குற்றங்களில் கமால் குணரத்னவுக்கும் தொடர்பிருக்கிறது என குற்றம்சாட்டப்பட்டு வருகிற்து,

இந்த நிலையில் இலங்கை ராணுவத்தில் இருந்து நேற்று கமால் குணரத்ன ஓய்வு பெற்றார். அவர் எழுதிய நந்திக்கடலுக்கான பாதை ( Road to Nandikadal) நூல் ஆங்கிலம், சிங்களம் மொழிகளில் இன்று வெளியிடப்பட உள்ளது.

இந்த நூலில் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான இறுதி யுத்தம் தொடர்பான பல புதிய தகவல்கள் இடம்பெறக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Security analysts are said to be keeping a close eye on the book ‘Road to Nandikadal’, true story of defeating Tamil Tigers by Major General Kamal Gunaratne, expected to be release today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X