For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராமன் ஆண்டாலும்.. ராவணன் ஆண்டாலும்.. மறுபடியும் அமைச்சரானார் ஜெயசூர்யா!

Google Oneindia Tamil News

கொழும்பு: ராஜபக்சே அமைச்சரவையிலும் அமைச்சராக இருந்தார் முன்னாள் இலங்கை வீரர் ஜெயசூர்யா. இப்போது சிறிசேன ஆட்சியிலும் அவர் அமைச்சராகியுள்ளார்.

மைத்ரிபால சிறிசேன அரசில் துணை அமைச்சராக நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார் ஜெயசூர்யா.

அவருடன் திலங்கா சுமதிபாலா, எரிக் வீரவர்தனே, விஜய தஹநாயகே ஆகியோரும் அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டனர்.

Sanath Jayasuriya Becomes Minister in Sirisena Government With Three Others

முந்தைய ராஜபக்சே அரசில் தபால்துறை துணை அமைச்சராக இருந்தார் ஜெயசூர்யா.

தற்போது சிறிசேன அரசில் புதிய அமைச்சர்களாக சேர்ந்துள்ள ஜெயசூர்யா உள்ளிட்ட நான்கு பேருமே இலங்கை சுதந்திரா கட்சியைச் சேர்ந்தவர்கள். இக்கட்சியின் தலைவராக சிறிசேனா இருக்கிறார்.

ஜெயசூர்யா தற்போது இலங்கை கிரிக்கெட் அணியின் தேர்வாளர் குழுத் தலைவராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Former cricketer Sanath Jayasuriya has taken oath as a minister in the Maithripala Sirisena government as a Deputy Minister.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X