For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இலங்கை மலையக பகுதியில் பயங்கர நிலச்சரிவு- 300 இந்திய வம்சாவளி தமிழர்கள் பலி!- 20 சடலங்கள் மீட்பு!

By Mathi
Google Oneindia Tamil News

கொழும்பு: இலங்கையில் மலையகப் பகுதியான பதுளை மாவட்டத்தில் இன்று காலை ஏற்பட்ட மிகப் பயங்கர நிலச்சரிவில் 300க்கும் மேற்பட்ட இந்திய வம்சாளித் தமிழர்கள் புதையுண்டனர். இதுவரையிலான மீட்புப் பணியில் 20 உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் உயிரிழப்பு அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

இலங்கையில் பருவமழை தீவிரமானதால் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் மலையகப் பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது.

Sri Lanka landslide: 18 dead and 300 missing

இந்திய வம்சாவளித் தமிழர்கள் அதிகம் வசிக்கும் மலையகமான ஊவா மாகாணத்தின் பதுளை மாவட்டத்தில் கொஸ்லாந்த, மீரியபெத்தையில் இன்று காலை மிகப் பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது.

இந்த நிலச்சரிவில் மொத்தம் 70 வீடுகள் அப்படியே மண்ணில் புதையுண்டன. இந்த 70 வீடுகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் உயிருடன் புதைந்தனர். இவர்கள் அனைவரும் இந்திய வம்சாவளித் தமிழர்கள். அனைவரையும் மீட்பதற்கான பணிகள் காலை முதல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஆனால் தற்போது வரை 20 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இப்பகுதியில் தொடர் மழை பெய்து வந்ததால் நிலச்சரிவு அபாயம் இருப்பதாக ஏற்கெனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தால் பல குடும்பங்கள் வெளியேறிவிட்டன. எஞ்சியிருந்தோரே நிலச்சரிவில் சிக்கியுள்ளனர்.

மண்ணில் புதையுண்டவர்களை மீட்கும் பணியில் இலங்கை ராணுவமும் விமானப்படையும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் முகாமிட்டிருந்த இலங்கை ராணுவத்தின் கமாண்டோ படை வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் பதுளைக்கு சென்றுள்ளனர்.

200 ஏக்கர் பரப்பளவில் நிலச்சரிவு?

மொத்தம் 200 ஏக்கர் பரப்பளவில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் மீறியபெந்த என்ற தோட்டப் பகுதியையே காணவில்லை என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் இப்பகுதியில் தமிழர்கள் அமைத்திருந்த கோயில் ஒன்றும் நிலச்சரிவில் புதைந்து போய்விட்டது.

இந்த பகுதியில் இயங்கி வந்த 10 கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Sri Lanka landslide: 18 dead and 300 missing

இதனிடையே நிலச்சரிவு மீட்புப் பணிகளை துரிதப்படுத்த உத்தரவிட்டுள்ளதாக இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே தமது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இலங்கை இந்திய வம்சாவளித் தமிழ் அமைச்சரான ஆறுமுகம் தொண்டமான் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளைப் பார்வையிட்டு வருகிறார்.

உயிர் தப்பியவர்கள்

இந்த பயங்கர நிலச்சரிவில் உயிர் தப்பியவர்களில் ஒருவரான மகேந்திரன் என்பவர், இன்று காலை 7 மணியளவில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. நாங்கள் தப்பியோட முயற்சித்தும் பலனில்லை.

எப்படியாவது ஓடி தப்பியோடிவிடலாம் என்று நினைத்தோம் முடியாமல் போய்விட்டது. சுமார் 500 பேர் இதில் சிக்கியிருக்கலாம். எனது குடும்பத்தைச் சேர்ந்த 9 பேரின் கதி என்ன என்று தெரியவில்லை என்றார்.

இதேபோல் ராதா என்ற பெண் கூறுகையில், காலையில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. அந்த ஒரு சத்தத்தை மட்டுமே எங்களால் கேட்க முடிந்தது. இடுப்பு கீழே முழுவதும் மண் மூடிவிட்டது. சிலர் மண்ணை வெட்டி அகற்றி என்னை உயிரோடு காப்பாற்றினர் என்றார்.

English summary
At least 18 people are dead and hundreds are missing following a landslide in central Sri Lanka.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X