For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இரு நாட்டுப் பேச்சுவார்த்தைக்கு பலன்.. 51 தமிழக மீனவர்கள் விடுதலை.. உறவினர் மகிழ்ச்சி

இலங்கை சிறையில் இருந்த 51 தமிழக மீனவர்களை அந்நாட்டு அரசு விடுதலை செய்துள்ளது. இரு நாட்டு அமைச்சர்களின் பேச்சுவார்த்தைக்கு கிடைத்த பலன் இது என்று மீனவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Google Oneindia Tamil News

யாழ்ப்பாணம்: யாழ்ப்பாண சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழகத்தைச் சேர்ந்த 51 மீனவர்களை இலங்கை அரசு விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளது. இந்தியா மற்றும் இலங்கை அமைச்சர்கள் உடனான உயர்மட்ட பேச்சுவார்த்தையை அடுத்து தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கடல் எல்லையைத் தாண்டி மீன் பிடித்தனர் என்று கூறி அடிக்கடி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது வழக்கமாக நடைபெற்று வருகிறது. மீனவர்களின் வாழ்க்கையை கேள்விக் குறியாக்கும் இது போன்ற செயல்கள் நடைபெறாமல் இருப்பதற்கான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வந்தன.

Sri Lanka releases 51 Tamil fishermen

கடந்த 2ம் தேதி இந்திய, இலங்கை மீனவர்கள் தொடர்பான பேச்சுவார்த்தை கொழும்பு நகரில் நடைபெற்றது. அதில் இருநாட்டு அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்தியா சார்பில் மத்திய அமைச்சர் ராதாமோகன் சிங்கும் இலங்கை சார்பில் அமைச்சர்கள் மஹிந்தா அமரவீரா, மங்கள சமரவீரா ஆகியோரும் பங்கேற்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

இதில், இரு நாடுகளிலும் கைது செய்யப்படும் மீனவர்களை கையாளுவது, இந்திய, இலங்கை கடற்படையினரால் கைப் பற்றப்பட்டுள்ள படகுகளை விடுவிப்பது, இரு நாட்டு மீனவர்களும் இணைந்து ஆழ்கடல் மீன்பிடித் தொழிலில் கூட்டாக ஈடுபடுவது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டன.

இந்தப் பேச்சுவார்த்தையை அடுத்து இன்று 51 தமிழக மீனவர்களை விடுதலை செய்ய இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது. விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் இன்னும் ஓரிரு நாட்களில் தாயகம் திரும்புவார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

English summary
Sri Lanka government has released 51 Tamil fishermen from Jaffna prison today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X