For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இலங்கை அதிபர் தேர்தல்- வாக்குப் பதிவு முடிவடைந்தது- சுமார் 80% வாக்குகள் பதிவு

Google Oneindia Tamil News

Recommended Video

    இலங்கை 8-வது அதிபர் தேர்தல்- பலத்த பாதுகாப்புடன் வாக்குப் பதிவு தொடங்கியது

    கொழும்பு: இலங்கையின் 8-வது அதிபர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது. இத்தேர்தலில் ஒட்டுமொத்தமாக சுமார் 75% வாக்குகள் பதிவாகி உள்ளன.

    இலங்கையின் தற்போதைய அதிபர் மைத்திரிபால சிறிசேனாவின் பதவிக் காலம் முடிவடைகிறது. இதனையடுத்து புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று காலை 7 மணி தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற்றது.

    Voting begins in Srilanka Presidential Elections

    இத்தேர்தலில் மொத்தம் 35 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். இலங்கை வரலாற்றில் மிக அதிக அளவிலான வேட்பாளர்கள், அதிபர் தேர்தலில் போட்டியிட்டனர். இதனால் மிக நீளமான வாக்குச் சீட்டு இம்முறை பயன்படுத்தப்பட்டது.

    இன்றைய தேர்தலில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான கூட்டணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சேவுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது.

    தமிழர் தரப்பில் தமிழரசுக் கட்சி உள்ளிட்டவை சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதாக அறிவித்தன. கருணா. வரதராஜ பெருமாள் உள்ளிட்ட சிலர் கோத்தபாய ராஜபக்சேவை ஆதரிப்பதாக அறிவித்தனர்.

    Voting begins in Srilanka Presidential Elections

    12,845 வாக்குச் சாவடிகளில் சுமார் 1.60 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இவர்களில் 9.50 லட்சம் பேர் புதிய வாக்காளர்கள்.

    இன்று காலை முதலே அனைத்து பகுதிகளிலும் வாக்குச் சாவடிகளில் வாக்காளர்கள் கூட்டம் அலைமோதியது. மாலை 5 மணிவரை விறுவிறுவென வாக்குப் பதிவுகள் நடைபெற்றன. யாழ்ப்பாணம் உள்ளிட்ட இடங்களில் மழைக்கு நடுவேயும் மக்கள் வாக்களித்தனர்.

    மாலை 5 மணியுடன் வாக்குப் பதிவு முடிவடைந்த நிலையில் ஒட்டுமொத்தமாக சுமார் 80% வாக்குகள் பதிவாகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    English summary
    Voting began for the Srilanka's 8th Presidentila Election on Saturday.\
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X