சென்னை கொடுங்கையூர் பேக்கரியில் தீவிபத்து.. 45 பேர் படுகாயம்.. தீயணைப்பு வீரர் ஒருவர் பலி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை கொடுங்கையூர் பேக்கரியில் தீவிபத்து.. 45 பேர் படுகாயம்.. தீயணைப்பு வீரர் ஒருவர் பலி

சென்னை கொடுங்கையூர் பேக்கரியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 45 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். தீயை அணைக்க முயன்ற தீயணைப்பு வீரர் ஒருவரும் பலியானார். இந்தச் சம்பவத்தால் கொடுங்கையூர் பகுதியில் பெரும் சோகம் நிலவுகிறது.

1 Died and 45 were injured in fire accident at Chennai

சென்னை: சென்னை கொடுங்கையூரில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் தீயணைப்பு வீரர் ஒருவர் பலியானார். 45 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்த அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் சென்னையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொடுங்கையூர் மீனாம்பாள் சாலையில் உள்ள பேக்கரியில் நேற்று நள்ளிரவில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பேக்கரியின் கதவை திறந்து, தீயை கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்த போது கடையின் உள்ளே இருந்த சிலிண்டர் வெடித்து சிதறியது.

சிலிண்டர் வெடித்ததால் நாலாபுறமும் தீ ஜூவாலைகள் பரவி தீயணைப்பு வீரர்கள் மற்றும் சாலையில் சென்றவர்கள் மீது பட்டது. அதில் தீயணைப்பு வீரர்கள் 3 பேருக்கு 80 சதவிகிதம் தீக்காயம் ஏற்பட்டது. இதில் மொத்தம் 45 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

தீ விபத்தில் கொடுங்கையூர் காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் விக்னேஷ் மற்றும் போலீசார் ஜெயபிரகாஷ், அந்தோணி, புருஷோத்தமன் ஆகியோர் பலத்த காயமடைந்தனர் என்று தெரிய வந்துள்ளது.

மொத்தம் 45 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டதில், ஏகராஜன் என்ற தீயணைப்பு வீரர் இன்று காலை உயிரிழந்தார். மற்றவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தீவிபத்துச் சம்பவத்தால் கொடுங்கையூர் பகுதியில் அதிர்ச்சி நிலவுகிறது.

Bus accident atChennai -Madurai highway 30 injured | Oneindia Tamil

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
1 Died and 45 were injured in fire accident at Chennai Kodungaiyur Bakery.
Please Wait while comments are loading...