கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேர் கைது.. இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்

கச்சத்தீவை, இலங்கைக்கு, இந்திராகாந்தி தலைமையிலான மத்திய அரசு, வழங்கியது. இப்போது இலங்கை கட்டுப்பாட்டில் அந்த இடம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

சமீபத்தில் ராமேஸ்வரம் அருகேயுள்ள தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர் பிரிட்ஜோவை இலங்கை கடற்படை நடுக்கடலில் வைத்து சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த சம்மதித்த பிறகு, மீனவர்கள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தொடங்கியுள்ளனர்.

 10 Tamil fishermen, arrested near Katchatheevu by Srilankan navy

இந்த நிலையில், இன்று கச்சத் தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் சிலர், மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், சுற்றி வளைத்து அவர்களை கைது செய்தனர். மொத்தம் 10 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு அழைத்து செல்லப்பட்டு அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. கச்சத்தீவை, இலங்கைக்கு, இந்திராகாந்தி தலைமையிலான மத்திய அரசு, வழங்கியது. இப்போது இலங்கை கட்டுப்பாட்டில் அந்த இடம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
10 Tamil fishermen, arrested near Katchatheevu by Srilankan navy on Tuesday early morning.
Please Wait while comments are loading...