பேருந்துகள் மீது கல்வீச்சு... கண்ணாடி உடைப்பு... இந்து முன்னணி பிரமுகர் கொலையால் கோவையில் பதற்றம்

கோவை: இந்து முன்னணி பிரமுகர் கொலை செய்யப்பட்டதால் கோவை, திருப்பூரில் அரசுப் பேருந்துகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் பதற்றம் நிலவி வருகிறது.

11 buses damaged in stone pelting

கோவையில் நேற்று இரவு இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் மர்ம நபர்களால் செய்யப்பட்டார். இதனையடுத்து கோவையில் பதற்றம் நிலவி வருகிறது. மேலும் இன்று முழு அடைப்புக்கு இந்து முன்னணி அழைப்பு விடுத்துள்ளது.

இந்நிலையில், கோவை திருப்பூரில் அரசுப் பேருந்துகள் மீது கல்வீசி இந்து முன்னணியினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் கோவை சின்னவேடம்பட்டி, தொண்டாமுத்தூர் உள்ளிட்ட இடங்களில் 5 அரசுப்பேருந்துகள் தாக்குதலுக்கு உள்ளாகி சேதமடைந்துள்ளன. மேலும், திருப்பூரில் கல்லூரி சாலை, சின்னக்கரை உள்ளிட்ட இடங்களில் 6 அரசு பேருந்துகளின் கண்ணாடி உடைந்துள்ளது.

English summary
At least 11 buses were damaged in stone pelting in Coimbatore and Tirupur, condemning the murder of Hindu Munnani district spokesperson Sasikumar on Thursday night.
Please Wait while comments are loading...

Videos