For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

யப்பா... இன்போசிஸ் நிறுவனத்தில் 113 பேருக்கு சம்பளம் “ஒரு கோடி ரூபாய்”!

Google Oneindia Tamil News

சென்னை: தகவல் தொழில்நுட்ப துறையில் முன்னணியில் உள்ள இன்போசிஸ் நிறுவனத்தில் ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் சம்பளம் வாங்குபவர்களின் எண்ணிக்கை ஒரே வருடத்தில் 113 ஆக உயர்ந்துள்ளது.

நாட்டின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை ஏற்றுமதி நிறுவனமான இன்போசிஸ் நிறுவனத்தில் 2013-14 நிதி ஆண்டில் 18 நிர்வாகிகள்(executives) மட்டுமே 1 கோடி ரூபாய்க்கு மேல் ஊதியம் பெறும் பட்டியலில் இருந்தனர்.

113 Infosys executives drew over 1 crore as compensation last year

ஆனால் 2014-15 நிதி ஆண்டில் 113 நிர்வாகிகள் 1 கோடி ரூபாய்க்கு மேல் ஊதியம் பெறும் பட்டியலில் உள்ளனர். இதே போல் கடந்த வருடம் 60 லட்சத்திற்கும் மேல் ஊதியம் பெறுபவர்கள் எண்ணிக்கை 72.

அதுவே இந்த வருடம் 202 ஆக உயர்ந்துள்ளது. பல ஊழியர்களுக்கு ஊதியத்தொகை இருமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்போசிஸ் நிறுவனத்தின் ஆண்டு அறிக்கையிலிருந்தே இந்த தகவல்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.

கடந்த வருடம் இன்போசிஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்ற விஷால் சிக்கா ஊழியர்களுக்கு பல சலுகைகளை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

English summary
There's been a dramatic increase in the number of correlates and high-paid executives in Infosys in the past year, a move that analysts ascribe to CEO Vishal Sikka's effort to align salaries with the market and stem the spate of top-level exits in the run up to his appointment in August last year.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X