For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வெள்ளம்: பல்லவன், திருச்செந்தூர், பொதிகை, முத்துநகர், ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் உட்பட 12 ரயில்கள் ரத்து!

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: விழுப்புரம்- தாம்பரம் இடையே தண்டவாளத்தில் வெள்ள நீர் தேங்கியிருப்பதால் சென்னை எழும்பூரில் இருந்து இன்று புறப்படும் 12 முக்கிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதில் தென்மாவட்டங்களுக்கு செல்லும் திருச்செந்தூர், முத்துநகர், பொதிகை, ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்களும் புதுவை, காரைக்கால் செல்லும் ரயில்களும் அடங்கும்.

12 South bound trains from Chennai cancel

வடதமிழகத்தில் வரலாறு காணாத கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் ஏரி உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி எங்கெங்கும் காணினும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ரயில் தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.

இதனைத் தொடர்ந்து சென்னை எழும்பூரில் இருந்து இன்று மாலை 3.45 முதல் புறப்பட வேண்டிய 12 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ரத்து செய்யப்பட்ட ரயில்கள் விவரம் (அடைப்புக்குறிக்குள் புறப்பட வேண்டிய நேரம்)

12605 சென்னை எழும்பூர்- காரைக்குடி பல்லவன் எக்ஸ்பிரஸ் (மாலை 3.45)

16105 சென்னை எழும்பூர்- திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் (மாலை 4.05)

16713 சென்னை எழும்பூர்- ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் (மாலை 5 மணி)

16115 சென்னை எழும்பூர்- புதுச்சேரி எக்ஸ்பிரஸ் (இரவு 6.10)

12693 சென்னை எழும்பூர்- தூத்துக்குடி முத்துநகர் எக்ஸ்பிரஸ் (இரவு 7.15)

12661 சென்னை எழும்பூர்- செங்கோட்டை பொதிகை எக்ஸ்பிரஸ் (இரவு 8.55)

16101 சென்னை எழும்பூர்- ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் (இரவு 9.40)

16179 சென்னை எழும்பூர்- மன்னார்குடி மன்னை எக்ஸ்பிரஸ் (இரவு 10 மணி)

16177 சென்னை எழும்பூர்- திருச்சி ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் (இரவு 10.30 மணி)

11063 சென்னை எழும்பூர்- சேலம் எக்ஸ்பிரஸ் (இரவு 11 மணி)

16175 சென்னை எழும்பூர்- காரைக்கால் எக்ஸ்பிரஸ் (இரவு 11.15)

16183 சென்னை எழும்பூர்- தஞ்சாவூர் உழவன் எக்ஸ்பிரஸ் (இரவு 11.30)

English summary
12 Express Trains from Egmore, Chennai cancelled today after railtracks flooded.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X