For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

செங்கோட்டை அருகே பரவும் மர்மக்காய்ச்சல் - 7ஆம் வகுப்பு மாணவி பலி

செங்கோட்டை அருகே மர்ம காய்ச்சலுக்கு 7 வகுப்பு மாணவி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Google Oneindia Tamil News

செங்கோட்டை: நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே மர்ம காய்ச்சலுக்கு 7ஆம் வகுப்பு மாணவி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி சுற்றுவட்டார கிராமப்பகுதிகளில் கடந்த சில மாதங்களாகவே வைரஸ் காய்ச்சல் என்று பொதுவாக கூறப்படும் மர்மக்காய்ச்சல் வேகமாக பரவிவருவதால் தனியார் மருத்துவமனைகள் மற்றும் அரசுமருத்துவமனைகளில் நாளுக்கு நாள் ஏராளமான மக்கள் புற நோயாளிகளாகவும் காய்ச்சல் முற்றியவர்கள் உள் நோயாளிகளாகவும் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

12 year old school girl killed in a mysterious fever

தனியார் மருத்துவமனைகளுக்கு சென்ற பின்னர் அங்கிருந்து ஏழை மக்கள் அரசு மருத்துவமனைகளை நோக்கி வந்தாலும் காய்ச்சல் குணமடைய அதிகபட்சம் 15 நாட்கள் ஆவதால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவிவருவதால் ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் புளியரை தாட்கோநகர் பகுதியை சார்ந்த மாரியப்பன் என்பவரது 12வயது மகள் 7ஆம் வகுப்பு மாணவி கார்த்திகா என்பவர் உடல்நலக்குறைவோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக நேற்று அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலை கார்த்திகா உடல்நலம் மிகவும் மோசமான நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதன்காரணமாக செங்கோட்டை வட்டாரப் பகுதிகளில் அச்சம் ஏற்பட்டுள்ளது.மருத்துவத்துறை சார்பில் மூளை சம்பந்தபட்ட காய்ச்சல் என்று கூறப்படுகிறது.

English summary
The 12 year old school girl name karthiga, killed in a mysterious fever near Senkottai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X