For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் போட்டியிடும் ரஜினி ரசிகர்!: ரஜினி அரசியலுக்கு வரணுமாம்!!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட ரஜினி ரசிகர் ஒருவர் மனுதாக்கல் செய்துள்ளார். மக்கள் பாதுகாப்புக் கழக நிறுவனர்- தலைவர் டிராபிக் ராமசாமி உட்பட நேற்று 6 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

காலியாக உள்ள ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு பிப்ரவரி 13ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அதிமுக, திமுக உள்ளிட்ட முக்கிய வேட்பாளர்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

13 persons file nominations on Srirangam by poll

நேற்றைய தினம் ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் காதர் மொய்தீனிடம் டிராபிக் ராமசாமி, தமிழ்நாடு கள் இயக்கம் சார்பில் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த இல.கதிரேசன், சுயேச்சை வேட்பாளர்கள் இ.ஆனந்த், டி.ஆனந்த் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.

ராம்ஜி நகரை அடுத்த சோழன் நகரில் அமைந்துள்ள கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் மனோகரனிடம் சட்டக் கல்லூரி மாணவர் கார்த்திக், ராஜபாளையத்தைச் சேர்ந்த ரஜினி ரசிகர் மன்மதன் ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

தமிழ்நாடு கள் இயக்கம் சார்பில் போட்டியிடும் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த இல.கதிரேசன் மனுதாக்கல் செய்துவிட்டு வெளியே வந்தபோது, டிராபிக் ராமசாமி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளே நுழைந்தார். இருவரும் ஒருவருக்கு ஒருவர் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்துக்கொண்டனர்.

போலீஸ் கமிஷனரை மாற்றுக

வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் டிராபிக் ராமசாமி செய்தியாளர்களிடம் பேசிய டிராபிக் ராமசாமி, "இங்கே 3 ஆண்டுகளுக்கும் மேலாக பணியில் இருந்த முக்கிய மான அரசு அதிகாரிகளை ஏற்கெனவே மாற்றியுள்ளனர். ஆனால் 3 ஆண்டுகளைக் கடந்த மாநகர போலீஸ் கமிஷனரை இது வரை மாற்றவில்லை. அவர் ஆளுங்கட்சியினருக்கு ஆதரவாக செயல்படுகிறார் என்று குற்றம் சாட்டினார்.

தேர்தல் ஆணையத்திடம் புகார்

ஸ்ரீரங்கத்தில் தமிழக அமைச்சர்கள் முகாமிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகளை மதிக்காமல் சட்டத்துக்குப் புறம்பாகச் செயல்படுகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கச் சொன்னால், எடுக்க மறுக்கிறார். எனக்கு பாதுகாப்பு வழங்கக் கோரியதற்கு மறுத்துவிட்டார். அவரை 48 மணி நேரத்தில் பணியிடமாற்றம் செய்யச் சொல்லி தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளேன். ஸ்ரீரங்கம் தொகுதியில் நான் போட்டியிட வேண்டும் என்பதற்காகவே இப்போது இடைத்தேர்தல் வாய்ப்பு உருவாகியுள்ளது" என்றார்.

ரஜினி ரசிகர்

வேட்புமனு தாக்கல் செய்த ரஜினி ரசிகர் மன்மதன், "ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்பதை வலியுறுத்தி ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடுவதாக தெரிவித்தார்.

13 பேர் மனுத் தாக்கல்

ஸ்ரீரங்கம் தொகுதியில் ஏற்கெனவே 7 பேர் மனுத் தாக்கல் செய்துள்ள நிலையில், நேற்று வேட்புமனு தாக்கல் செய்த 6 பேருடன் சேர்த்து இதுவரை மொத்தம் 13 பேர் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

English summary
13 persons filed nominations for the by-election to Tamil Nadu Legislative Assembly from Srirangam Assembly Constituency.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X