For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது எப்படி? இதோ சில டிப்ஸ் !

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: தீபாவளி பண்டிகை கொண்டாடும் போது விபத்துககளைத் தவிர்க்கவும், பாதுகாப்பான முறையில் பட்டாசு வெடிப்பது குறித்தும் சென்னை மாநகரக் காவல் துறை பொதுமக்களுக்கு 15 ஆலோசனைகளை வழங்கியுள்ளது.

தீபாவளி பண்டிகை இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. தீபாவளி என்றாலே பட்டாசு, புதுத் துணி, பலகாரம் இவைகள் தான் முக்கிய பங்கு வகிக்கும். தீபாவளி அன்று சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை புதுத் துணி அணிந்து பட்டாசு வெடிப்பது வழக்கம். அவ்வாறு பட்டாசு வெடிக்கும் போது பொது மக்கள் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து சென்னை மாநகர காவல்துறை சில அறிவுரைகளை வழங்கியுள்ளது.

15 Safety Tips during Diwali festival

1. காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும். அதிக அளவு ஓசை எழுப்பக்கூடிய பட்டாசுகளை தயாரிக்கவோ, பயன்படுத்தவோ, விற்கவோ கூடாது.

2. எளிதில் தீப்பிடிக்கும் பொருட்கள் உள்ள இடத்தில் பட்டாசுகளை வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும். மோட்டார் வாகனம், கார், பேருந்து போன்ற வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ள இடங்களின் அருகிலும், பெட்ரோல் சேமித்து வைத்திருக்கும் இடம், பெட்ரோல் பங்க் அருகிலும் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது.

3. பட்டாசுகளைக் கொளுத்தி மேலே தூக்கி எறிந்துவிட்டு வேடிக்கைப் பார்க்க முயற்சித்தால், வெடிக்கும் பட்டாசு அருகில் இருப்பவர்கள் மீது விழுந்து உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும்.

4. பட்டாசு வெடிப்பதில் கவனக் குறைவு கூடாது. மக்கள் நடமாட்டம் உள்ள இடத்தில் மிகுந்த கவனத்துடன் பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.

5. பட்டாசு மீது தகர டப்பாக்களைப் போட்டு மூடி, வேடிக்கைப் பார்த்தால், அது வெடிக்கும்போது டப்பா தூக்கி எறியப்பட்டு, விபத்துகள் நேரிடக்கூடும்.

15 Safety Tips during Diwali festival

6. குடிசைப் பகுதியிலும், மாடிக் கட்டிடங்கள் அருகிலும், ராக்கெட் போன்ற வெடிகளை வெடிக்கக் கூடாது.

7. எரியும் விளக்கு அருகில் பட்டாசுகளை வைக்கக்கூடாது.

8. ஈரமுள்ள பட்டாசுகளை அடுப்பில் வைத்து உலர்த்தக் கூடாது.

9. பெரியவர்கள் பாதுகாப்பின்றி குழந்தைகள் தனியாகப் பட்டாசுகளை கொளுத்த அனுமதிக்கக் கூடாது.

10. பறந்து, சீறிப்பாய்ந்து சென்று வெடிக்கும் வகையைச் சேர்ந்த பட்டாசு வகைகளை குடிசைகள், ஓலைக் கூரைகள் உள்ள இடங்களுக்கு அருகில் கொளுத்தக் கூடாது.

11. பட்டாசு கடைகளுக்கு அருகில் புகைப் பிடிப்பதோ, புகைத்த துண்டுகளை கடை அருகில் கவனக்குறைவாக வீசி எறிவதோ கூடாது.

12. பட்டாசு விற்கும் கடை அருகே சென்று விளம்பரத்துக்காகவோ, போட்டிக்காகவோ கூட பட்டாசுகளை வெடிக்கக் கூடாது. இவ்வகையான ஆலோசனைகளை மாநகர காவல்துறை வழங்கியுள்ளது.

English summary
Most of these unfortunate accidents can be prevented by following these basic tips, says chennai city police
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X