For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜல்லிக்கட்டு எழுச்சி எதிரொலி.. இன்றும் 19 ரயில்கள் ரத்து.. ரயில்வே அறிவிப்பு

ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் எதிரொலியாக இன்றும் 19 ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்கான அறிவிப்பை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: ஜல்லிக்கட்டு போராட்டத்தின் காரணமாக தெற்கு நோக்கிச் செல்லும் 19 ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து திருச்செந்தூர், கன்னியாகுமரி, ராமேஸ்வரம் ஆகிய இடங்களுக்குச் செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தூத்துக்குடி, திருவனந்தபுரம், செங்கோட்டை, மதுரை பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ், மதுரை மஹால் எக்ஸ்பிரஸ் ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

19 trains cancelled due to Jallikattu protest

இதே போன்று சென்னைக்கு வர வேண்டிய 10 ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி, தூத்துக்குடி-சென்னை முத்துநகர், திருச்செந்தூர்-சென்னை செந்தூர் விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. ராமேஸ்வரம்-சென்னை சேது, செங்கோட்டை-சென்னை பொதிகை விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி-சென்னை, நெல்லை-சென்னை, மானாமதுரை-சென்னை சிலம்பு ஆகிய விரைவு ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது. திருவனந்தபுரம்-சென்னை, நாகர்கோவில்-சென்னை சென்ட்ரல் ஆகிய விரைவு ரயில்களும் இயங்காது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

English summary
Southern Railway today cancelled 19 trains due to Jallikattu protest held across the state.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X