For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

15வது சட்டசபையில் பதவியேற்ற 2 அப்பா-மகன்கள்: யார்னு தெரியும்ல?

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: 15வது சட்டசபை கடந்த புதன்கிழமை கூடியபோது 2 அப்பா, மகன்கள் எம்.எல்.ஏ.க்களாக பதவியேற்றுக் கொண்டனர்.

தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. இதையடுத்து ஜெயலலிதா தமிழகத்தின் முதல்வராக 6வது முறையாக பதவியேற்றுக் கொண்டார்.

2 Father-son duos take oath as MLAs in TN

இதையடுத்து கடந்த புதன்கிழமை 15வது சட்டசபை கூடியது. கூட்டத்தில் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் எம்.எல்.ஏ.க்களாக பதவியேற்றுக் கொண்டனர். திமுக தலைவர் கருணாநிதி வருவாரா, மாட்டாரா என்று பேசப்பட்டது. இந்நிலையில் அவர் சட்டசபைக்கு வந்து எம்.எல்.ஏ.வாக பதவியேற்றுக் கொண்டார்.

அவரது மகனும், திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலினும் எம்.எல்.ஏ.வாக பதவியேற்றார். இதை போன்றே மற்றும் ஒரு அப்பா, மகனும் எம்.எல்.ஏ.வாக பதவியேற்றனர்.

அது வேறு யாரும் அல்ல ஆத்தூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ. ஐ. பெரியசாமியும், அவரது மகன் பழனி எம்.எல்.ஏ. ஐ.பி. செந்தில்குமாரும் தான்.

முன்னதாக சட்டசபைக்கு வந்த ஜெயலலிதாவும், ஸ்டாலினும் ஒருவரையொருவர் பார்த்ததும் வணக்கம் தெரிவித்தது மக்களை கவர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
2 father-son duos took oath as MLAs in the TN assembly on wednesday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X