For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெண்கள் ஓட்டு எப்போதும் அதிமுகவிற்கே... அடித்துச் சொல்லும் லயோலா காலேஜ் சர்வே

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: எம்.ஜி.ஆர் காலம் தொடங்கி இன்றைக்கு ஜெயலலிதா காலம் வரைக்கும் அதிமுகவிற்கான பெண்களின் வாக்கு வங்கி மாறாமல் இருக்கிறது என்பதை லயோலா கல்லூரி வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு உணர்த்துகிறது. அதேநேரத்தில் தமிழகத்தின் பரவலான ஆதரவைப் பெற்றுள்ள அதிமுக, ஒரு சில தரப்பினரிடம் திமுகவைவிட பின்தங்கி இருப்பது தெரிகிறது.

லயோலா கல்லூரியின் மக்கள் ஆய்வுக்குழு மாணவர்கள் நடத்திய கருத்துக்கணிப்பின் மூலம் இந்த தகவல் வெளியாகியுள்ளது. வெவ்வேறு காரணிகளின் அடிப்படையில் வாக்களிக்கும் விதத்தைக் குறுக்காய்வு செய்தால், தமிழகத்தின் பரவலான ஆதரவைப் பெற்றுள்ள அதிமுக, ஒரு சில தரப்பினரிடம் திமுகவைவிட பின்தங்கி இருப்பது தெரியவந்துள்ளது.

சென்னை லயோலா கல்லூரி மக்கள் ஆய்வு மையம் சார்பில் இம்மாதம் 13-ம் தேதி முதல் 26ம் தேதி வரை கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. அதன் முடிவுகளை பேராசிரியர் ராஜநாயகம் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

28 மாவட்டங்கள்

28 மாவட்டங்கள்

இந்த கருத்துக்கணிப்பு தமிழகம் முழுவதும் 28 மாவட்டங்களில் நடத்தப்பட்டது. 3370 பேர் இந்த கருத்துக் கணிப்பில் கலந்துகொண்டார்கள். ஆண்களும், பெண்களும் இந்த கருத்துக்கணிப்பில் சம அளவில் கலந்து கொண்டார்கள்.

19 மாவட்டங்கள்

19 மாவட்டங்கள்

மாவட்ட ரீதியில் சென்னையில் அதிமுகவைவிட சற்று அதிக ஆதரவு பெற்ற கட்சியாக திமுக உள்ளது. ஒன்பது மாவட்டங்களில் இரு கட்சிகளும் சம பலத்துடன் உள்ளன. ஏனைய மாவட்டங்களில் அதிமுக முன்னிலை வகிக்கிறது.

திமுகவிற்கு ஆதரவு

திமுகவிற்கு ஆதரவு

கல்வி ரீதியாக, கல்லூரி-தொழிற்கல்வி கற்றோரிடையே திமுகவுக்கு ஆதரவு அதிகம். பிற தரப்பினர் அனைவரிடமும் அதிமுகவுக்கு அதிக ஆதரவு இருக்கிறது.

அதிமுகவிற்கு செல்வாக்கு

அதிமுகவிற்கு செல்வாக்கு

ஜாதி ரீதியாக, பிற்படுத்தப்பட்ட வகுப்பினரிடையே அதிக செல்வாக்குடன் திமுக விளங்க, தாழ்த்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற உயர் சாதியினர் ஆகிய அனைத்து ஜாதியினரிடமும் அதிமுக செல்வாக்குப் பெற்றுள்ளது.

முஸ்லீம்கள் ஆதரவு

முஸ்லீம்கள் ஆதரவு

மத ரீதியாக, முஸ்லிம்களின் வாக்கு திமுகவுக்கு அதிகம் செல்கிறது. இந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் அதிமுகவை அதிகமாக ஆதரிக்கின்றனர்.

இளைஞர்கள் ஆதரவு

இளைஞர்கள் ஆதரவு

வயது ரீதியாக, 20 வயதுக்குக் கீழான இளைஞர்களிடம் திமுகவுக்கு சற்று அதிக வரவேற்புள்ளது. மற்ற அனைத்து வயதுப் பிரிவினரும் அதிமுகவுக்கு முதலிடம் வழங்குகின்றனர்.

பெண்களின் வாக்கு

பெண்களின் வாக்கு

பாலியல் ரீதியாக, அதிமுகவை விட திமுகவுக்கு ஆண்கள் மத்தியில் செல்வாக்கு கூடுதல் பெண்களின் ஏகோபித்த ஆதரவு அதிமுகவுக்கே உள்ளது.

மக்கள் பிரச்சினை

மக்கள் பிரச்சினை

மக்கள் பிரச்சனைகளை தீர்க்கக் கூடிய கட்சிகள் என்று எவையெவை என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, அதிமுகவிற்கு 23.9 சதவிகிதம் பேரும், திமுகவிற்கு 19.3 சதவிகிதம் பேரும், தேமுதிகவிற்கு 4.6 சதவிகிதம் பேரும், பாமகவிற்கு 2.4 சதவிகிதம் பேரும் பாகவிற்கு 1.9 சதவிகிதம் பேரும் ஆதரவு அளித்துள்ளனர். எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என்று 26.6 சதவிகிதம் பேர் கூறியுள்ளனர்.

English summary
Women voters support for always ADMK The Loyola college survey has indicated that all is not well in the ruling camp and indicated that a political realignment is on the cards in the run up to the 2016 assembly polls.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X