For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாமக்கல் பள்ளி மாணவர்கள், 2,626 பேர் டாக்டர், என்ஜினீயர் ஆவது உறுதி

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளியில் படித்த மாணவர்களில் 2626 பேர் அநேக பாடங்களில் 200க்கு200 எடுத்து சாதனை படைத்துள்ளனர்.

பிளஸ் 2 தேர்வில், அதிகமான மதிப்பெண்களை பெற்று பொறியியல், மருத்துவம் போன்ற மேல்கல்விக்கு எளிமையாக செல்ல வேண்டும் என்பதற்காகவே நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் தங்களுடைய பிள்ளைகளை கொண்டுவந்து சேர்க்கின்றனர்.

2626 Namakkal School students get 100% marks score

அவர்களின் கனவு வீணாகாத வகையில், இந்த ஆண்டும் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்விக்கு தேவையான மதிப்பெண்களை நாமக்கல் பள்ளிகளில் படித்த மாணவர்கள் பெற்றுள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில் படித்த, அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களில், கணிதத்தில் 820 பேரும், வேதியியலில் 609 பேரும், இயற்பியலில் 739 பேரும், உயிரியலில் 228 பேரும், கம்ப்யூட்டர் சயின்ஸில் 155 பேரும், பொருளாதாரத்தில் 19 பேரும், கணக்குபதிவியலில் 29 பேரும், வணிக கணிதத்தில் 5 பேர் என 2,626 மாணவர்கள் 200க்கு 200 மதிப்பெண் பெற்று, சாதனை படைத்துள்ளனர்.

English summary
In Namakkal school's 2626 Students get 200 out of 200 in varies subjects in Plus Two examination.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X