For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அம்மா மறைவு... அதிர்ச்சியில் 280 அதிமுகவினர் மரணம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியிலும், தீக்குளித்தும் 280 பேர் மரணமடைந்துள்ளதாக அதிமுக செய்தி வெளியிட்டுள்ளது.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா கடந்த 5ம் தேதி திங்கட்கிழமை உயிரிழந்தார். அவரது உடல் மெரீனா கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

அதிமுகவினரில் அம்மா என்று அழைக்கப்படும் ஜெயலலிதா உயிரிழந்த செய்தி கேட்டு ஏராளமனோர் அதிர்ச்சியடைந்தனர். பலர் தீக்குளித்தனர். மாரடைப்பில் பலர் மரணமடைந்தனர். இதுவரை 280 பேர் உயிரிழந்து விட்டதாக அதிமுக தெரிவித்துள்ளது.

280 people died of shock after Amma's demise,' claims AIADMK

இது குறித்து அதிமுக சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

மறைந்த முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை இரவு உயிரிழந்தார். அவரது மறைந்த செய்தியைக் கேட்டதும் அதிர்ச்சி தாளாமல் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 280 பேர் மாரடைப்பு உள்பட பல்வேறு காரணங்களால் உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்களின் ஆன்மா இறைவன் நிழலில் இளைப்பாற இறைவனைப் பிரார்த்திக்கிறோம். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு அதிமுக சார்பில் குடும்ப நல நிதியுதவியாக தலா ரூ.3 லட்சம் வழங்கப்படும்.

ஏற்கனவே 77 பேருக்கு நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் 203 பேருக்கு தலா ரூ. லட்சம் நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளதாக அதிமுக தெரிவித்துள்ளது.

English summary
The All India Anna Dravida Munnetra Kazhagam on Saturday calimed that 280 had died of shock hearing of Jayalalithaa's illness and eventul death. The party had earlier released a list containing 77 names of people who reportedly died following Jayalalithaa'a death.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X