For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வரலாறு காணாத வெள்ளம்: மக்கள் தங்க திறந்துவிடப்பட்ட மசூதிகள், தியேட்டர்கள்!!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை தொடர்வதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு பகுதிளில் மின்சார வினியோகம் தடைபட்டு சென்னை மாநகரம் இருளில் மூழ்கியது. வெள்ளத்தில் சிக்காமல் வீடுகளை விட்டு வெளியேறி தவிக்கும் மக்கள் தங்குவதற்காக ஆங்காங்கே உள்ள பிரபல திரையரங்கங்களும் மசூதிகளும் திறந்துவிடப்பட்டுள்ளன.

வரலாறு காணாத வெள்ளத்தால் சிக்கித் தவிக்கிறது சென்னை மாநகரம், தாம்பரம் சுற்றுவட்டார பகுதிகளிலும் வெள்ள நீர் பல அடி உயரத்திற்கு தேங்கியுள்ளது. ஏராளமான மக்கள் படகுகள், ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

My situation rite now. Ground floor completely submerged, water above 10ft. Waiting for rescue but we are all safe.

Posted by Harish Kumar onTuesday, December 1, 2015

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் மின்சாரம் தடைபட்ட காரணத்தால் முன்னதாகவே வீடுகளை விட்டு வெளியேறினர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக புதிதாக 28 முகாம்கள் அமைக்கப்பட்டு அவற்றில் சுமார் 3,0000 பேர் அடைக்கலம் புகுந்தனர்.

ஆங்காங்கே உள்ள பிரபல திரையரங்கங்களும் பாதிக்கப்பட்ட மக்கள் தங்குவதற்கு திறந்துவிடப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை தொடர்வதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு பகுதிளில் மின்சார வினியோகம் தடைபட்டு சென்னை மாநகரம் இருளில் மூழ்கியது. பிற்பகல் முதலே புறநகர் பகுதிகளில் மின்விநியோகம் தடைபட்டது.

மயிலாப்பூர், மந்தைவெளி உள்ளிட்ட பகுதிகளில் நேற்றிரவு 8 மணிக்கு மின்விநியோகம் நிறுத்தப்பட்டது. இதுவரைக்கும் மின்சாரம் வழங்கப்படவில்லை. விடிய விடிய இருளில் தவித்தது சென்னை மாநகரம்.

தொடர் மழையால் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக வேளச்சேரி, மடிப்பாக்கம், நங்கநல்லூர், கிண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மின்சார விநியோகம் நிறுத்தப்பட்டது. மதியம் நிறுத்தப்பட்ட மின் விநியோகம் நள்ளிரவு தாண்டியும் தொடர்ந்ததால் மக்களின் அன்றாட வாழ்க்கை முற்றிலும் முடங்கிவிட்டது.

மசூதிகளில் அடைக்கலம்

இதனிடையே சென்னையில் உள்ள அனைத்து பள்ளி வாசல்களில் மக்கள் வந்து தங்கி கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு தங்கும் மக்களுக்கு பள்ளி வாசல் நிர்வாகிகள் உணவுக்கும் ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
A total of 30000 victims of flash floods that occurred in parts of Chennai, Tambaram and Mudichur were rescued and evacuated by 16 boats from their residential localities to safer places.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X