For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

45 அரசு பஸ்கள் கண்ணாடி உடைப்பு... பஸ்கள் இயக்கத்தை தடுத்த 36 பேர் கைது

போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்துக்கு மத்தியில் தமிழகம் முழுவதும் இயக்கப்பட்ட பேருந்துகளில் 45 அரசு பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தின்போது பேருந்துகளை இயக்க முற்பட்ட பயிற்சி தொழிலாளர்களை தடுத்ததாக 36 போக்குவரத்து ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.

ரூ.7,000 கோடி நிலுவைத் தொகை வழங்க வேண்டும் என்று கோரி நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் தோல்வி ஏற்பட்டதால் போக்குவரத்து தொழிலாளர்கள் நேற்று முதல் ஸ்டிரைக்கில் ஈடுபட்டு வருகின்றனர்.

36 were arrested for not allowing to operating buses

இதனால் பொதுமக்கள் ஆங்காங்கே தவித்து வருகின்றனர். இதை கருத்தில் கொண்டு பயிற்சி தொழிலாளர்கள், தனியார் பேருந்து ஓட்டுநர்களை வைத்து அரசு பேருந்துகளை அரசு இயக்கி வருகிறது.

தங்களுக்கு போராட்டத்தை நீர்த்து போக செய்வதற்காகவே இந்த முயற்சி என்று குற்றம்சாட்டிய பேருந்து தொழிலாளர்கள் அவர்களை இயக்கவிடாமல் தடுத்தனர். இதனால் 36 பேர் கைது செய்யப்பட்டனர்.

மேலும் தமிழகம் முழுவதும் இயக்கப்படும் பேருந்துகளை மர்மநபர்கள் கல்வீதசி தாக்கி வருகின்றனர். அவ்வாறு 45 அரசு பேருந்துகளை தாக்கிய 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.

English summary
36 transport workers are arrested for stop operating government buses by trainees and others.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X