பகலில் வியாபாரம்.. இரவில் விபச்சாரம்.. டெய்லர் கடை பெண் உள்பட 4 பேர் கைது!

By:

திருச்சி: திருச்சியில் ரெடிமேட் துணிகள் விற்பனை மற்றும் டெய்லரிங் கடை நடத்தி வரும் பெண் ஒருவர், கடைக்குள் இரவில் விபச்சாரம் நடத்தி வந்ததைப் போலீஸார் கண்டுபிடித்துள்ளனர்.

திருச்சி ஜெயில் கார்னர் பகுதியில் ஒரு 2 அடுக்கு மாடிக் கட்டடம் உள்ளது. வர்த்தக நிறுவனங்கள் இதில் செயல்பட்டு வருகின்றன. இதில் முதல் மாடியில் ஒரு ரெடிமேட் கடையும், கூடவே பெண்களுக்கான டெய்லரிங் கடையும் உள்ளது. இந்தக் கடையில் பகலில் வியாபாரமும், இரவில் விபச்சாரமும் நடப்பதாக போலீஸாருக்குப் புகார்கள் வந்தன.

4 including tailor shop woman arrested for brothel

இதையடுத்து போலீஸார் இந்தக் கடையைக் கண்காணித்தனர். இதில் அக்கடையில் விபச்சாரம் நடப்பது உறுதியானது. இதையடுத்து விபச்சாரத் தடுப்புப் பிரிவு போலீஸார் நேர்று இரவு கடைக்குள் புகுந்து அதிரடி சோதனை நடத்தினார். அப்போது கடைக்குள் ஒரு ரகசிய அறை இருப்பது தெரிய வந்தது. அங்கு பெண்களுடன் சில ஆண்கள் உல்லாசமாக இருந்தனர்.

இதையடுத்து கடை பெண் உரிமையாளர் ஜெய மேரி, கணேசமூர்த்தி, புரோக்கர்கள் திலீப், அருண்குமார் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். அங்கு விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 5 இளம் பெண்கள் மீட்கப்பட்டு அரசுக் காப்பகத்தில் சேர்க்கப்பட்டனர்.

English summary
Trichy police have arrested 4 persons including a tailor shop woman for running brothel in her tailor cum textile shop.
Please Wait while comments are loading...

Videos