49 மீனவர்களை விடுவிக்க நடவடிக்க எடுக்க வேண்டும்... மோடிக்கு பழனிச்சாமி அவசரக் கடிதம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் பழனிச்சாமி, பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த புதுக்கோட்டை, நாகை, ராமேஸ்வரத்தைச் சேர்ந்த தமிழக மீனவர்கள் 49 பேர் இலங்கை கடற்படையினரால் இன்று கைது செய்யப்பட்டனர். மேலும், அவர்களிடமிருந்து 12 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன,

49 fishermen arrested, CM writes PM

நெடுந்தீவு, காரைநகருக்கு அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை எல்லை தாண்டி வந்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் அட்டூழியம் செய்துள்ளனர். இது தமிழக மீனவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இன்று இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட அவர்களது படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் பழனிச்சாமி, பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

Srilanga Court order to Release the Boats of Tamil Nadu fishermen-Oneindia Tamil

ஆயிரத்தில் ஏன்? லட்சத்தில் ஒருவரை தேர்ந்தெடுங்கள், தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்!

English summary
TN chief minister Palanisamy wrote a letter to Modi over fishermen issue.
Please Wait while comments are loading...