For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மீன்பிடி தடை முடிந்து கடலுக்குள் சென்ற 7 மீனவர்களை சிறைபிடித்த இலங்கைப் படை!

Google Oneindia Tamil News

ராமேஸ்வரம்: மீன்பிடி தடைக்காலம் முடிந்து நேற்று நள்ளிரவில் மீன்பிடிக்கச் சென்ற ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 7 மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் சிறை பிடித்துள்ள செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மீன்பிடி தடைக்காலம் முடிந்து மீண்டும் மீன் பிடிக்கச் சென்ற முதல் நாளே இவ்வாறு இலங்கைப் படையினர் நடந்து கொண்டதால் ராமேஸ்வரம் மீனவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

7 Rameshwaram fishermen arrested by Lankan navy

வங்கக் கடலில் அமலில் இருந்து வந்து மீன்பிடி தடைக்காலம் முடிந்ததால் நேற்று முதல் தமிழக மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர். இந்த நிலையில் ராமேஸ்வரத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்துச் சென்றனர்.

இந்த சம்பவத்தால் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கைது செய்யப்பட்ட 7 மீனவர்கள் மற்றும் அவர்களின் படகை மீட்கக் கோரி தமிழக அரசுக்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

English summary
Lankan navy has arrested 7 Rameshwaram fishermen and taken to the Lankan court.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X