For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மகாத்மா காந்தி சிலைக்கு மாலையிட சென்றவர்களுக்கு அனுமதி மறுப்பு... நாமக்கல்லில் பரபரப்பு

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மாலையிட வந்தவர்களுக்கு நகராட்சி கமிஷனர் அனுமதி மறுத்த சம்பவத்தால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மாலையிட வந்த காங்கிரஸ் கட்சி மற்றும் பொதுநல அமைப்பினருக்கு நகராட்சி கமிஷனர் அனுமதி மறுத்த சம்பவத்தால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

71st Independence Day: Permission denied to Congress party cadres in Namakkal

குமாரபாளையம் நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவிக்க, காங்கிரஸ் கட்சியினர் மற்றும் பொதுநல அமைப்பினர் வந்தனர். அப்போது அவர்களுக்கு குமாரபாளையம் நகராட்சி ஆணையர் மகேஷ்வரி அனுமதி மறுத்துள்ளார்.

இதனால் காங்கிரஸ் கட்சியினரும் பொதுநல அமைப்பினரும் அதிர்ச்சி அடைந்தனர். நகராட்சி கமிஷனரின் இந்த திடீர் நடவடிக்கையால் அவர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்குச் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

English summary
Congress party cadres were planned to respect Mahatma Gandhi statue in Namakkal for this 71st Independence Day, Permission denied by Kumarapalayam Municipal commissioner.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X