For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மதுரை அருகே அரசு பேருந்து-லாரி மோதி பயங்கர விபத்து: 15 பேர் பலி, 20 பேர் படுகாயம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

மதுரை: மதுரை மாவட்டம் டி. கல்லுப்பட்டி அருகே அரசுப் பேருந்துடன் சிமெண்ட் எற்றி வந்த லாரி மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் 15 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 19க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

8 dead, 10 injured in road accident near Tirumangalam

நெல்லையில் இருந்து குமுளி நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பேருந்து அழகாபுரியை அடுத்துள்ள சுப்புலாபுரத்தை அடைந்தது. அந்த நிறுத்தத்தில் இருந்து அம்மாபட்டி என்ற இடத்தை கடந்த போது சாலையின் வளைவில் எதிரே வந்த சிமென்ட் லாரியுடன் வேகமாக மோதியது. இதில் இரு லாரியும் பேருந்தும் பயங்கரமாக சேதமடைந்தன. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 13 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும், இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் அங்கிருந்து வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றன.

பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதியதில் பயங்கரமாக நொறுங்கியுள்ளன. சிமெண்ட் லாரியில் வந்தவர்களில் யாருமே உயிருடன் இல்லை. பேருந்தின் டிரைவர் உயிரிழந்து விட்டார். பேருந்தின் சீட்டுக்கு அடியிலும் பயணிகள் சிக்கிக் கொண்டனர். தீயணைப்பு மீட்புப்பணியினரும், காவல்துறையினரும் உடனடியாக மீட்டு 108 வாகனங்கள் மீது அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர் சீட்டுக்கு அடியில் பயணிகள் சிக்கிக் கொண்டிருப்பதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

8 dead, 10 injured in road accident near Tirumangalam

முதலுதவி சிகிச்சைக்குப் பின்னர் காயமடைந்தவர்கள் திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கும், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணி நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியர் வீரராகராவ் கூறியுள்ளார். விபத்தில் படுகாயமடைந்தவர்கள் அனைவருக்கும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பேருந்து பயணம் செய்த 2 பேர் தவிர அனைவரும் மீட்கப்பட்டு விட்டனர் என்றும் ஆட்சியர் வீரராகவராவ் தெரிவித்துள்ளார்.

பேருந்தும் லாரியும் வேகமாக வந்ததே விபத்துக்குக் காரணம் என்று விபத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர். விபத்து நிகழ்ந்த சாலையில் தொடர்ந்து பலமுறை விபத்துகள் நடந்துள்ளன. அபாயகரமான வளைவுகள் நிறைந்த இந்த இடத்தில் விபத்து நடைபெறாத வகையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உதவி எண்கள் அறிவிப்பு

இதனிடைய அரசு பேருந்து - லாரி மோதி விபத்துக்குள்ளான சம்பவம் குறித்து விபரம் அறிய உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. திருமங்கலம் வட்டாட்சியர் 94450 00591, 94450 00592; மதுரை - 94450 00586. இந்த எண்களில் தொடர்பு கொண்டால் விபத்தில் சிக்கியவர்களைப் பற்றியும் , சிகிச்சை பெறுபவர்களைப் பற்றியும் தகவல் அறியலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
8 people were killed and eight people were injured in a road accident near T. Kallupatti in Madurai district on Saturday,.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X