For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னை அரசு மருத்துவமனையில் நர்ஸ் உடைமாற்றியதை படம் பிடித்த ஆசாமி கைது

சென்னை அருகே அரசு தொற்றுநோய் மருத்துவமனையில் நர்ஸ் ஒருவர் தன் அறையில் உடை மாற்றுவதை மறைந்திருந்து ஜன்னல் வழியாக படம் பிடித்த ஆசாமியை போலீஸார் கைது செய்தனர்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: சென்னை திருவொற்றியூர் அரசு தொற்றுநோய் மருத்துவமனையில் நர்ஸ் ஒருவர் தன் அறையில் உடை மாற்றுவதை மறைந்திருந்து ஜன்னல் வழியாக படம் பிடித்த ஆசாமியை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள அரசு தொற்றுநோய் மருத்துவமனை உள்ளது. இங்கு ஒப்பந்த அடிப்படையில் பல்வேறு நர்ஸ்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்த மருத்துவமனையில் தொற்றுநோய்கள் சம்பந்தமாக சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இதனால் இங்கு ஏராளமானோர் வருவதும் போவதுமாக இருப்பர்.

 உடை மாற்றும் அறை

உடை மாற்றும் அறை

இந்நிலையில் இங்கு பணியாற்றும் செவிலியர்கள் வீட்டில் இருந்து வரும் போது சாதாரண உடையில் வருவர். மருத்துவமனைக்கு வந்து அங்கு செவிலியர் உடையை அணிந்து கொள்வர். இதற்கென ஒரு அறை அவர்களுக்கென உண்டு.

 பணி முடிந்தது

பணி முடிந்தது

இந்நிலையில் பணி முடிந்து வீட்டுக்கு செல்வதற்காக உடை மாற்றும் அறைக்கு செவிலியர் ஒருவர் வந்தார். அப்போது தான் அணிந்திருந்த உடையை மாற்றிக் கொண்டிருந்தார்.

 நோட்டமிட்ட ஆசாமி

நோட்டமிட்ட ஆசாமி

அப்போது இளைஞர் ஒருவர் ஜன்னல் வழியாக நின்று கொண்டு அவர் உடைமாற்றுவதை செல்போனில் படம் பிடித்து கொண்டிருந்தார். இதை எத்தேச்சையாக அந்த நர்ஸ் கவனித்துவிட்டு அதிர்ச்சி அடைந்தார்.

 அலறல் சப்தம்

அலறல் சப்தம்

உடனே அவர் கூச்சலிட்டார். அப்போது அங்கு இருந்தவர்கள் அந்த ஆசாமியை மடக்கி பிடித்து புதுவண்ணாரப்பேட்டை போலீஸாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் அதே மருத்துவமனையில் எல்க்ட்ரீஷியனாக பணியாற்றும் புஷ்பராஜ்தான் அவர் என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

English summary
An Electrician who is working in Government hospital was arrested because of taking photos in cellphone when a nurse was changing her dress.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X