For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னையில் பன்றிக் காய்ச்சல் தாக்கி ஒருவர் பலி.. பீதியில் பொது மக்கள்

சென்னையில் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ரமேஷ் என்பவர் உயிரிழந்தார். இதானால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: பன்றிக் காய்ச்சல் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரமேஷ் என்பவர் இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

தமிழகத்தில் கடந்த 2009-10 ஆம் ஆண்டுகளில் பன்றிக்காய்ச்சல் தீவிரமாக காணப்பட்டது. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். சுகாதாரத்துறை எடுத்த நோய் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல் பரவுவது கட்டுப்படுத்தப் பட்டது.

A man has died of Swine flu in rajiv gandhi hospital at chennai

இந்நிலையில், தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் மீண்டும் வேகமாக பரவி வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருச்சி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பன்றிக்காய்ச்சலால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருவண்ணாமலையைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர் சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் தங்கி வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் ரமேஷ் பன்றிக் காய்ச்சல் தாக்கப்பட்டு சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்தார்.

English summary
A man from thiruvannamalai died of complications from swine flu on tuesday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X