பாலாற்றில் சட்ட விரோதமாக மணல் அள்ளியவர் உயிருடன் எரித்துக்கொலை... வேலூரில் பயங்கரம்!

Subscribe to Oneindia Tamil

வேலூர்: பாலாற்றில் சட்ட விரோதமாக மணல் அள்ளிய நபர் உயிருடன் எரித்துகொலை செய்யப்பட்டுள்ள சம்வம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கால் எலும்பு முறிந்த நிலையில் அவரது உடல் மீட்கப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டம் சோமளாபுரம் பாலாற்று பகுதியில் மாட்டு வண்டிகள் மட்டும் மணல் அள்ளி விற்பனை செய்ய கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பொதுப்பணித்துறை குவாரியை திறந்தது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தது வழக்கு தொடர்ந்ததையடுத்து குவாரியில் மணல் அல்ல இடைக்கால தடைவிதிக்கப்பட்டது.

பேருக்குதான் குவாரி மூடப்பட்டாலும் மாட்டு வண்டிகள் மூலம் மணல் விற்பனை தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளது. இரவு 7 மணிக்கு மேல் காலை 9 மணிவரை மாட்டு வண்டிகளில் மணல் கடத்தப்பட்டு வந்துள்ளது.இதன்காரணமாக ஆற்றுப்படுகையில் 10 முதல் 15 அடி வரை பள்ளம் ஏற்பட்டுள்ளது.

மாட்டு வண்டியில் மணல் கடத்தல்

இந்நிலையில் சோமளாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் வேலு என்கிற வேலாயுதம். 47 வயதான இவர் சட்டத்திற்கு புறம்பாக மாட்டு வண்டி மூலம் பாலாற்றில் மணல் அள்ளி விற்பனை செய்து வந்துள்ளார்.

உயிருடன்ன எரித்துக்கொலை

நேற்று அதிகாலை பாலற்றுப் படுகையில் மணல் அள்ளும் போது வேலு எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். அவர் சட்ட விரோதமாக மணல் கொள்ளையில் ஈடுபட்டபோது கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

கால் எலும்பு முறிந்துள்ளது

அவரது வலது கால் எலும்பு முறிந்துள்ளது. எரிக்கப்பட்ட இரண்டு மணிநேரத்துக்கு பிறகு வேலுவின் உடல் மீட்கப்பட்டுள்ளது.ஆனால் போலீசாரும் வருவாய் துறையினரும் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளனர். இது போன்று எந்த ரிப்போர்ட்டும் வரவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கார்டியாக் அரஸ்ட்டாம்..

வேலுவின் குடும்பத்தினர் அவர் வயலுக்கு சென்றபோது கார்டியாக் அரஸ்ட் ஏற்பட்டு உயிரிழந்ததார் என தெரிவித்துள்ளதாக வருவாய்த்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் இதுகுறித்து வருவாய்த்துறை ஆய்வாளரின் அறிக்கைக்காக காத்திருப்பதாகவும் அவர்கள் கூறினர்.

மாஃபியாக்களுக்கு உதவும் போலீஸ்

ஆனால் இதனை மறுத்துள்ள கிராம மக்கள், மணல் கொள்ளை மாஃபியாக்களுக்கு உதவும் வகையில் இந்த கொலையை போலீசாரும் வருவாய்த்துறையினரும் மூடி மறைப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் ஆரம்பத்திலேயே போலீசார் மணல் கொள்ளையை தடுத்திருந்தால் இந்த கொலையை தடுத்திருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

பெரும் அதிர்ச்சி

இந்நிலையில் இந்த கொலை குறித்து விசாரிக்கப்படும் என வேலூர் மாவட்ட எஸ்பி பகலவன் கூறியுள்ளார். மாட்டு வண்டி மூலம் மணல் அள்ளி விற்பனை செய்த நபர் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

English summary
A 45-year-old man was allegedly buried alive while mining sand illegally in the Palar riverbed near Somalapuram village in Vellore district of Tamil Nadu in the early hours of Saturday.
Please Wait while comments are loading...