For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தந்தையின் கண்டிப்பு.. தாயின் பரிவு.. ஜல்லிக்கட்டு களத்தில் கவனம் ஈர்க்கும் காவல்துறை

தந்தையின் கண்டிப்பு.. தாயின் பரிவு.. ஜல்லிக்கட்டு களத்தில் கவனம் ஈர்க்கும் காவல்துறை

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவு நிகழ்ச்சி முதல் இப்போது ஜல்லிக்கட்டு விவகாரம் வரை, தமிழக போலீசாரின் பணி அளப்பரியது.

அதிலும் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் அரசுக்கு எதிராகவே இளைஞர்களும், மாணவர்களும் போராட்ட களத்தில் குதித்தபோதிலும், அவர்களுக்கும் சேர்த்தே பாதுகாப்பு கொடுத்து வருகிறது காவல்துறை.

A royal salute to the Tamilnadu police

மெரினா பீச் ஆகட்டும், அலங்காநல்லூராகட்டும் காவல்துறையின் பணி அபாரமானது. அலங்காநல்லூரில் நடைபெற்ற கைது நடவடிக்கை கூட மேலிட உத்தரவால்தான் என்கிறார்கள். சென்னை ஓ.ம்.ஆர் போராட்டத்தில் தடியடி உட்பட ஒரு சில சம்பவங்களை தவிர்த்து பார்த்தால் காவல்துறை இப்போராட்டத்திற்கு மனதளவில் உணர்வோடு ஒத்துழைப்பு கொடுத்துவருகிறது என்பதுதான் உண்மை.

அதை மெரினா பீச்சில் பேட்டியளித்த ஒரு போலீஸ்காரர் நிரூபித்துவிட்டார். சில இடங்களில் போராட்டக்காரர்களுக்கு அவசரத்திற்கு குடிநீர் கொடுத்து உதவியுள்ளனர் போலீசார் என்றால் அவர்கள் பண்பை நீங்கள் பார்த்துக்கொள்ளலாம். கல்லுக்குள் ஈரம் என்பார்களே அதுபோல காவல்துறையின் கஞ்சி போட்ட மிடுக்கு சீருடைக்குள் தமிழன் என்ற உணர்வு ஒளிந்திருந்தது வெளிப்பட்டுவிட்டது.

சாப்பிட கூட நேரமில்லாமல் சாலையோரங்களில் சாப்பிட்டுக்கொண்டும், பொது வெளியில் உட்கார்ந்து தூங்கியபடியும் பொறுமைகாக்கிறார்கள் காவல்துறையினர்.

ஒரு தாயின் கண்டிப்புடன்தான் இதுவரை காவல்துறை இந்த போராட்டங்களை கையாண்டு வருகிறது. எந்த ஒரு இடத்திலும் தனது அதிகாரத்தை காட்ட முற்படவில்லை. அன்பு கட்டளைகளை மட்டுமே அது பிறப்பித்து வருகிறது. சென்னை காவல்துறை தனது டிவிட்டரில் மெரினாவில் இளைஞர்கள் நடத்திவரும் போராட்டம் அறவழியிலானது என புகழாரம் சூட்டியுள்ளது இதற்கு மற்றொரு உதாரணம்.

ஒருவழியாக காவல்துறையினரின் நெருக்கடி மிகுந்த பணி ஜல்லிக்கட்டு நடைபெற்ற கையோடு முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கலாம்.

English summary
A royal salute to the Tamilnadu police who is in the duty to safeguard the Jallikattu protests.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X