புதுக்கோட்டையில் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து - 13 மாணவர்கள் காயம்

புதுக்கோட்டையில் தனியார் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 13 மாணவர்கள் காயமடைந்தனர்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: புதுக்கோட்டையில் அதிவேகமாக சென்ற தனியார் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 13 மாணவர்கள் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

புதுக்கோட்டையில் இயங்கி வரும் தனியார் பள்ளி ஒன்றில் ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இன்று காலை வழக்கம் போல் பள்ளி வேன் மாணவர்களை ஏறிச்சென்றது.

A school van met with a accident in Pudukkottai

திருக்கட்டளை சாலையில் சென்றபோத தனியார் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பள்ளி வேனில் சென்ற 13 மாணவர்கள் காயமடைந்தனர்.

அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னால் சென்ற லாரியை முந்த முயன்றபோது தனியார் பள்ளி வேனில் திடீரென பிரேக் பிடிக்காததால் நிலைதடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

English summary
A school van met with a accident in Pudukkottai. 13 students injured. when it was tracing a lorry the accident happened.
Please Wait while comments are loading...