For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அரசு டாஸ்மாக் நடத்தவும் ஒரு காரணம் இருக்குல்ல... சீனியர் சிட்டிசனின் வைரல் வீடியோ!

டாஸ்மாக் கடையை அரசாங்கம் நடத்துவது குறித்து விமர்சனங்கள் வந்தாலும் நமது குடிமகன்கள் எப்படி மதுவிற்கு அடிமையாகி இருக்கிறார்கள் என்பதை விளக்கும் வீடியோ வைரலாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

சென்னை: குழந்தைகள் பாலில் பிஸ்கட் தொட்டு சாப்பிடுவது போல வயதானவர் ஒருவர் அசால்ட்டாக சரக்கில் பிஸ்கட்டை தொட்டு சாப்பிடும் வீடியோ வைரலாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

மதுப்பழக்கம் மக்களின் அன்றாட வாழ்க்கையை எந்த அளவிற்கு பாதித்துள்ளது என்பதன் வெளிப்பாடாகவே தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு எதிரான போராட்டங்கள் அரங்கேறி வருகின்றன. இருப்பது உண்டு மகிழ்ச்சியோடு இருப்போம் என்ற நிம்மதியான வாழ்க்கை கூட வாழ முடியாத அளவிற்கு மக்கள் அல்லல்படுவதற்கு முக்கிய காரணம் மதுப்பழக்கம் என்று சொல்லப்படுகிறது.

டாஸ்மாக் கடை

டாஸ்மாக் கடை

அரசாங்கமே வருமானத்திற்கு டாஸ்மாக் கடைகளை நடத்துவதாக பல்வேறு விமர்சனங்களும் எழுகின்றன. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே மதுவின் வாடை அறியாமல் இல்லை என்ற நிலை வந்துவிட்டது.

எல்லாமே ஜாலிதான்

எல்லாமே ஜாலிதான்

என்ன தான் எதிர்ப்புகள் இருந்தாலும் அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் ஜாலி வாழ்க்கை நடத்தி வருகின்றனர் குடிமகன்கள். தமிழகத்தின் உள் மாவட்டம் ஒன்றில் டாஸ்மாக் கடையில் வைத்து முதியவர் ஒருவர் மதுபானம் அருந்தும் காட்சி வைரலாக வீடியோவில் பரவி வருகிறது. அந்த வீடியோவைப் பார்ப்பவர்களுக்கு அதிர்ச்சியோடு, இப்படியும் ஆட்கள் இருக்கிறார்களே என்றே எண்ணத் தோன்றும்.

மதுவில் தொட்டு சாப்பிடும் தாத்தா

பசி எடுத்தால் குழந்தைகள் ஏன் சில நேரங்களில் நாம் கூட பிஸ்கட்டை பால், டீ ,காபி என எதிலாவது தொட்டு சாப்பிடுவோம். அட இந்த தாத்தாவும் பிஸ்கட்டை நெனச்சு தான் சாப்பிடுறாரு ஆனா எதுல தெரியுமா குவாட்டர் சரக்குல.

குடியிருப்புகளுக்குள் மதுக்கடை

குடியிருப்புகளுக்குள் மதுக்கடை

வௌங்கிடும் நாடு, தமிழக அரசு டாஸ்மாக் நடத்துறதுலயும் ஒரு நியாயம் இருக்குல்ல என்பதற்கான சாட்சி தான் இந்த வீடியோ, நீங்களும் அந்தக் கொடுமைய பாருங்க. சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை மதுவிற்கு அடிமையாகிக் கிடக்கின்றனர். மதுக்கடைகளை மூடினால்தான் விடிவுகாலம் கிடைக்கும். மதுக்கடைகளை படிப்படியாக மூடுவோம் என்று ஜெயலலிதா கூறினார். ஆனால் அவரது மரணத்திற்குப் பிறகு நெடுஞ்சாலைகளில் மூடப்பட்ட கடைகளை கூட குடியிருப்புகளுக்குள் போட்டி போட்டு திறந்து வருகிறது அரசு.

English summary
An oldman at tasmac shops dips biscuit in liquor and having it happily video is going viral on social media hats off to tamilnadu government for opening tasmacs .
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X