For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வாக்காளர் பட்டியல் விவர இணைப்பிற்கு ஆதார் எண் கட்டாயமில்லை – சந்தீப் சக்சேனா தகவல்

Google Oneindia Tamil News

சென்னை: வாக்காளர் பட்டியலில் கூடுதல் விவரங்களை இணைக்க ஆதார் எண் அவசியம் இல்லை என்றும், ஆதார் எண் இல்லை என்றால் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்படாது என்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிக்காக தமிழகத்தில் 98 சதவிகித மக்களிடம் தகவல் பெறப்பட்டுள்ளதாக கூறினார்.

Aadhaar number not necessary for voter list details

காஞ்சிபுரம், சென்னை ஆகிய மாவட்டங்களில் இந்த பணிகள் முழுமையாக முடிவடையவில்லை என்றும், மற்ற மாவட்டங்களில் முழுமையாக முடிவடைந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் இணைக்கும் பணியை இம்மாதம் 31 ஆம் தேதிக்குள் முடிக்க உத்தரவிட்டுள்ளதாகவும், தகவல்கள் பதிவேற்றம் செய்யும் பணி இரண்டு அல்லது மூன்று வாரங்களில் முடிவடையும் என்றும் சந்தீப் சக்சேனா கூறியுள்ளார்.

முன்னதாக வாக்காளர் பட்டியலில் கூடுதல் விவரங்களை இணைக்க ஆதார் எண் கட்டாயம் எனவும், இல்லையெனில் பெயர் நீக்கப்படும் என்றும் மாவட்ட வாரியாக தேர்தல் அதிகாரிகள் வீடுகளில் நோட்டீஸ் ஒட்டி வந்தனர். இதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
There is no need of Aadhaar Number for voter list verification, Election officials says.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X