For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பல்வேறு சர்ச்சைகளுக்குப் பின்... ஜனநாயகக் கடமையை ஆற்றிய கமல்

By Manjula
Google Oneindia Tamil News

சென்னை: சென்னை தேனாம்பேட்டை அரசு உயர்நிலைப்பள்ளியில் நடிகர் கமல்ஹாசன் கவுதமி, மகள் அக்ஷராவுடன் வந்து வாக்களித்தார்.

தமிழக சட்டசபை தேர்தல் இன்று காலை 7 மணிக்கு துவங்கியது. அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தவிர 232 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு துவங்கியுள்ளது.

இந்நிலையில் மே 16ம் தேதி சென்னையில் இருந்தால் ஓட்டுப் போடுவேன் என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்திய கமல் நடிகை கவுதமி, மகள் அக்ஷராவுடன் வந்து தனது வாக்கினைப் பதிவு செய்திருக்கிறார்.

கமல்ஹாசன்

கமல்ஹாசன்

'சபாஷ் நாயுடு' படத்துவக்க விழாவின்போது "தமிழக சட்டசபைத் தேர்தல் நடைபெறும் மே 16 ஆம் தேதி நான் இந்தியாவில் இருக்கப்போவது இல்லை. படப்பிடிப்புகாக லாஸ் ஏஞ்சலஸ் செல்ல இருக்கிறேன் என்று கூறி ஓட்டு சர்ச்சைக்கு கமல் திரி கிள்ளிப் போட்டார். மேலும் என்னுடைய ஓட்டை வேறு யாரவது போடலாம் எனக்கு ஏற்கனவே அந்த அனுபவம் இருக்கிறது என்றார்.

தேர்தல் ஆணையம்

தேர்தல் ஆணையம்

இதைத்தொடர்ந்து கமல், கவுதமியின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருப்பதை போல, ட்வீட் செய்து நெட்டிசென்கள் தங்கள் ஆதங்கத்தைக் தீர்த்துக் கொண்டனர்.

2 நாட்களுக்கு முன்பு

2 நாட்களுக்கு முன்கூட மே 16ம் தேதி சென்னையில் இருந்தால் ஓட்டுப்போடுவேன் என்று கமல் கூறியிருந்தார். இந்நிலையில் வாக்குப்பதிவு தினமான இன்று கமல் நடிகை கவுதமி மகள் அக்ஷராவுடன் வந்து சென்னை தேனாம்பேட்டை அரசு உயர்நிலைப்பள்ளியில், தனது வாக்கினைப் பதிவு செய்திருக்கிறார்.

ஜனநாயகம்

ஜனநாயகம்

வாக்களிப்பிற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய கமல் ''வாக்குப்பதிவு சதவீதம் அதிகரிப்பது ஜனநாயகத்தின் வலிமையை அதிகப்படுத்தும்'' என்று தெரிவித்தார். முன்னதாக அஜீத், ரஜினி ஆகியோர் தங்கள் வாக்குகளை முதல் ஆளாகப் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

English summary
Actor Kamal Haasan Casted his Vote at a Polling Booth in Teynampet on Monday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X