நன்றி தவிர உடனே ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை- ஸ்டாலின் கண்டனம் குறித்து ட்விட்டரில் கமல்ஹாசன் கருத்து

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசை விமர்சித்த விவகாரத்தில் ஆதரவு தெரிவித்த திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு நடிகர் கமல்ஹாசன் ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.

தமிழக அரசை நடிகர் கமல்ஹாசன் விமர்சித்து வருகிறார். அவரது இந்த விமர்சனங்களுக்கு அமைச்சர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

kamalstalin

நடிகர் கமல்ஹாசன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் பாய வேண்டும் என அமைச்சர் சி.வி. சண்முகமும் மிரட்டல் விடுத்திருந்தார். அமைச்சர்களின் இந்த மிரட்டலுக்கு மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

ஸ்டாலினின் அறிக்கை வெளியான உடனேயே கமல்ஹாசன் தம்முடைய ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்து பதிவு போட்டுள்ளார்.

கமல்ஹாசனின் பதிவு:

அன்புச் சகோதரர் ஸ்டாலின் அவர்கட்கு,

நன்றி தவிர உடனே ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை. என் ஆதங்கங்களில் பல உங்கள் கோபச் செய்தியிலும் கோபச் செய்தியிலும் கூட தென்பட்டதில் எனக்குப் பெரிய ஆறுதலே. ஒவ்வொரு வாக்காளனிலும் ....தொடரும்... 

ஒரு தலைவன் இருக்கின்றான் என்பதை உணர மறுப்பவர் தலைவர்களாக நீடிக்கும் கனவு ஜனநாயகத்தில் பலிக்காது. பலிக்கவும் கூடாது..

இவ்வாறு கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.

மனத்திற்குப் பிடித்த வரன்கள் உங்கள் தமிழ் மேட்ரிமோனியில், பதிவு இலவசம்!

English summary
Actor Kamalhaasan thanked to DMK Working President MK Stalin for his support against the TamilNadu govt.
Please Wait while comments are loading...