For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஏழைக் குழந்தைகள் கல்விக்கு உதவுங்கள் - நடிகர் விஷால் கோரிக்கை: வீடியோ

கல்வி கிடைக்க வாய்ப்பு இல்லாத ஏழை குழந்தைகளுக்கு அனைவரும் உதவ வேண்டும் என நடிகர் விஷால் கோரிக்கை விடுத்துள்ளார்.

By Suganthi
Google Oneindia Tamil News

சென்னை: கல்வி கிடைக்க வாய்ப்பு இல்லாத குழந்தைகளுக்கு உதவினால் அது அவர்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த சமுதாயத்துக்கும் அது பலனளிக்கும் என நடிகர் விஷால் கூறினார்.

மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் இரண்டாம் நினைவு நாளையொட்டி ஆதரவற்றோர் குழந்தைகள் இல்லம் ஒன்றில் அப்துல் கலாமுக்கு அஞ்சலி விஷால் அக்குழந்தைகளுடன் சேர்ந்து அஞ்சலி செலுத்தினார்.

Recommended Video

    My Role model is APJ Abdulkalam Says Vishal-Oneindia Tamil

    பின்பு செய்தியாளர்களிடம் பேசிய விஷால், குழந்தைகளுக்கு கல்வி கொடுப்பதன் மூலம் அந்த குழந்தைகள் மட்டுமின்றி ஒட்டுமொத்த சமூகமும் வளர்கிறது. குழந்தைகளின் கையில் தான் இந்தியாவின் எதிர்காலம் இருக்கிறது என்று அப்துல் கலாம் சொன்னார். அக்குழந்தைகளுக்கு கல்வி கிடைக்க என்னுடைய டிரஸ்ட் வழியாக உதவி செய்து வருகிறேன்.

    அனைவரும் அவர்களால் முடிந்த அளவுக்கு பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவ வேண்டும். நாம் உதவி செய்வதைப் பார்த்தால் நம்மோடு சேர்ந்து மேலும் சிலர் கைகோர்க்கலாம். இது ஒரு சங்கிலித்தொடர் போல அடுத்தடுத்துத் தொடரும் என்றார்.

    மேலும் நடிகர்களின் சம்பளம் குறித்த கேள்விக்கு பதில் அளிக்கையில் எந்த நடிகரும் இத்தனை கோடி சம்பளம் வேண்டும் என தயாரிப்பாளர்களை கழுத்தைப் பிடித்து நெருக்கிக் கேட்பதில்லை என்றார்.

    அதேபோல், கஷ்டப்பட்டு பணம் போட்டு படம் எடுக்கும் ஒரு தயாரிப்பாளரின் படத்தை நிறுத்தும் அதிகாரம் யாருக்கும் இல்லை. அப்படி யாராவது செய்தால், தயாரிப்பாளர் சங்கம் எப்படியவது போராடி அந்த படப்பிடிப்பை நடத்த உதவும் என்று கூறினார்.

    English summary
    Every one should help the poor children's education. It will develope the whole society said actor Vishal in a orphanage after paying tributes to Abdul kalam.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X