For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முழு அடைப்புக்கு நடிகர் சங்கம் ஆதரவு.. திரையரங்குகள் மூடல்.. பகல் காட்சிகள், படபிடிப்பு ரத்து!

முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவாக தமிழகத்தில் தியேட்டர்கள் மூடப்பட்டன.

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்துக்கு நடிகர் சங்கம் ஆதரவு தெரிவித்தது. இதன்காரணமாக தியேட்டர்களில் பகல் காட்சிகள் மற்றும் படப்பிடிப்பு இன்று ஒருநாள் ரத்து செய்யப்பட்டது.

டெல்லியில் 41 நாட்களாக போராட்டம் நடத்திய தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் சார்பில் இன்று முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்றது.

Actors association canceled scenes in theater, and cinema shooting today

இதன்காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் ஆட்டோ, லாரி உள்ளிட்ட தனியார் வாகனங்கள் ஓடவில்லை.முழு அடைப்பு போராட்டத்துக்கு தொழிலாளர் முன்னேற்றம் சங்கம் உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்களும் ஆதரவு தெரிவித்தன.

இதனால் அரசுப்பேருந்துகளும் கணிசமாகவே இயக்கப்பட்டன. இந்நிலையில் விவசாயிகளுக்கு ஆதரவான இந்த முழு அடைப்பு போராட்டத்துக்கு நடிகர் சங்கம் ஆதரவு தெரிவித்தது.

முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து திரையரங்குகளில் பகல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டது. திரைப்பட படப்பிடிப்பும் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக நடிகம் சங்கம் தெரிவித்தது.

English summary
The actors association has supported the whole blockade for supporting farmersin Tamil Nadu. they have canceled scenes in theater, and cinema shooting today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X