அக்கா அக்கான்னு சொல்லி தமிழ்நாட்டை ஏமாற்றும் இருவர்.. ஜூலியோடு சசிகலாவையும் வெளுக்கும் ஆர்த்தி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அக்கா அக்கா என கூறி தமிழ்நாட்டை ஏமாற்றும் இரண்டு பேர் என ஜூலியும் சசிகலாவும் உள்ள மீமை நடிகை ஆர்த்தி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை ஆர்த்தி காயத்ரியுடன் சேர்ந்துக்கொண்டு ஜூலியை வம்பிழுப்பது போல் தெரிந்தது. ஜூலியை பார்த்து, போலி போலி எனக்கூறி வந்தார் ஆர்த்தி.

இதனால் கோபமடைந்த ரசிகர்கள் ஆர்த்தியை வெளியேற்றினர். இதையடுத்து 2 வாரங்களுக்கு முன்பு அவர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

முதுகில் குத்தும் ஜூலி

முதுகில் குத்தும் ஜூலி

ஆர்த்தி வெளியேறிய பிறகுதான் தெரிந்தது ஜூலி வெற்றி பெறுவதற்காக எப்படி வேண்டுமானாலும் நடிப்பார், யாருக்கு வேண்டுமானாலும் நம்பிக்கை துரோகம் செய்வார், யார் முதுகில் வேண்டுமானாலும் குத்துவார் என.

ரீடிவிட் செய்யும் ஆர்த்தி

ரீடிவிட் செய்யும் ஆர்த்தி

நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியபின் போட்டியாளர்கள் குறித்து கருத்து தெரிவிக்காமல் இருந்து வந்தார் ஆர்த்தி. அவரது ரசிகர்களின் கருத்துக்களையே தனது பக்கத்தில் ரீடிவிட் செய்து வந்தார்.

ஜூலி குறித்து மீம்

இந்நிலையில் தனது பக்கத்தில் மீம் ஒன்றை ஷேர் செய்துள்ளார் ஆர்த்தி. அதாவது ஜூலியும் சசிகலாவும் உள்ள போட்டோவில் அக்கா அக்கா என கூறி தமிழகத்தை ஏமாற்றும் 2 பேர் என்ற வாசகத்துடன் கூடிய மீமை அவர் ஷேர் செய்துள்ளார்.

ஜூலி ஏமாற்று பேர்வழி

ஜூலி ஏமாற்று பேர்வழி

இதன்மூலம் ஜூலி ஒரு ஏமாற்று பேர் வழி என ஆர்த்தி மீண்டும் ஒரு முறை அழுத்தமாக கூறியுள்ளார். மேலும் அக்கா அக்கா என அவர் தமிழ்நாட்டையே ஏமாற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளார் ஆர்த்தி.

சபதம் எடுத்த ஜூலி

சபதம் எடுத்த ஜூலி

ஆர்த்தியை வெளியேற்றிவிட்டுதான் நான் வெளியே செல்வேன் என சசிகலா ரேஞ்சில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜூலி சபதம் எடுத்தார். நினைத்ததை அழுதே சாதித்தார் ஜூலி என்பது குறிப்பிடத்தக்கது.

Big Boss Tamil, Arthi,Gayathri Raghuram are targerting Juliana-Filmibeat Tamil

ஆயிரத்தில் ஏன்? லட்சத்தில் ஒருவரை தேர்ந்தெடுங்கள், தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்!

English summary
Actress Harathi Shares meme about Julie on Twitter. She shared a meme in her face book page.
Please Wait while comments are loading...