For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தினகரனுக்கு எதுக்கு பிரசாரம் செய்யனும்? தலைதெறிக்க ஓடிய கருணாஸ், தனியரசு

கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து வெற்றிபெற்ற கொங்கு இளைஞர் பேரவைத் தலைவர் தனியரசும், முக்குலத்தோர் புலிப்படைத் தலைவர் நடிகர் கருணாஸ் தினகரனுக்காக ஆர்கே நகரில் பிரச்சாரத்துக்குச்

By Suganthi
Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக அம்மா அணி வேட்பாளர் தினகரனுக்காக கூட்டணிக் கட்சித் தலைவர்களான தனியரசு, கருணாஸ் ஆகியோர் பிரச்சாரத்துக்குச் செல்லத் தயங்குவதாகக் கூறப்படுகிறது.

கடந்த 2016 சட்டசபை தேர்தலில், அதிமுக கட்சி முக்குலத்தோர் புலிப்படை அமைப்பு என்ற கருணாஸ் கட்சிக்கும், கொங்கு இளைஞர் பேரவை என்ற தனியரசு அமைப்புக்கும் இரட்டை இலை சின்னத்தில் நிற்க வாய்ப்புத் தந்தது. ஜெயலலிதா கொடுத்த இந்த வாய்ப்பால், நடிகர் கருணாஸ், திருவாடனைத் தொகுதி எம்.எல்.ஏ ஆனார். அதேபோல தனியரசும் சட்டசபை உறுப்பினர் ஆனார்.

Admk alliance leaders actor Karunas and Thaniyarasu hesitate to Rk nagar for canvassing

டிடிவி தினகரன், ஆர்கே நகரில் பிரச்சாரத்ய்துக்குச் செல்லும் போது ஒன்றிரண்டு அமைச்சர்களே உடன் செல்கின்றனர். அந்த அமைச்சர்களும் மக்களுக்கு பரிச்சயம் இல்லாதவர்கள் என்பதால் யாரும் அவர்களைக் கண்டு கொள்வதில்லை. இதனால், பிரச்சாரத்துக்கு செல்லுமிடங்கள் எல்லாம் தினகரனே மைக் பிடித்து பேசிக்கொண்டு இருக்கிறார். பல இடங்களில் சொன்ன விஷயத்தையே திரும்பத் திரும்ப சொல்வதால், அவருடைய பேச்சு ஈர்க்கும்படியாக இல்லை.

இந்நிலையில், ஜெயலலிதாவால் எம்.எல்.ஏவான நடிகர் கருணாஸும், தனியரசும் ஒருநாள் கூட ஆர்கே நகர் தொகுதிக்கு பிரச்சாரத்துக்கு செல்லவில்லை. அவர்கள் தினகரனுக்காக பிரச்சாரத்துக்கு செல்லத் தயங்குவாதக் கூற்ப்படுகிறது.

கருணாஸ், சசிகலாவை ஆதரித்தார் என்பதால் அவருடைய முக்குலத்தோர் புலிப்படை பிளவுபட்டது. மேலும் மேலும் வெறுப்பை சம்பாதிக்க விரும்பாத காரணத்தால் கருணாஸ் ஆளே காணவில்லை. கருணாஸ் ஒரு பாடகர் என்பதால், அவரால் கொஞ்சம் கூட்டத்தை ஈர்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

தனியரசு, தன் மண்ணைச் சேர்ந்த எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக நீடிக்க விரும்புவதால் தினகரனுக்கு எந்த ஆதரவையும் தெரிவிக்காமல் உள்ளதாகக் கூறப்படுகிறது.

English summary
Admk alliance leaders Actor Karunas and Thaniyarasu hesitating to go with Dinakaran to Rk Nagar for canvass voters.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X