For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அதிமுகவில் கூட்டணி கட்சிகளுக்கு 7 சீட்... இரட்டை இலையில் போட்டி

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில் அதிமுக 227 தொகுதிகளிலும் கூட்டணிக்கட்சிகள் 7 தொகுதிகளளிலும் போட்டியிடுகின்றன. சீட் ஒதுக்கப்பட்டுள்ள கூட்டணி கட்சிகளும் இரட்டை இலைச் சின்னத்தில்தான் போட்டியிடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு மே 16ம் தேதி நடைபெறுகிறது. இம்மாதம் 22ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. இந்த நிலையில் 14 நாட்களாக நேர்காணல் நடத்திய அதிமுக பொதுச்செயலாளர் இன்று 234 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார்.

அதிமுக 227 தொகுதிகளில் போட்டியிடுகிறது. கூட்டணிக் கட்சிகளுக்கு 7 தொகுதிகளை ஒதுக்கியுள்ளார் ஜெயலலிதா. கூட்டணி வேட்பாளர்கள் 7 பேரும் அதிமுக சின்னமான இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகின்றனர். இதன்முலம் 234 தொகுதிகளிலும் இரட்டை இலைச் சின்னத்தில் களம் காண்கிறது அதிமுக.

பிரதான கட்சிகளான திமுக - காங்கிரஸ் இடையே தொகுதி உடன்படிக்கை மட்டும் ஏற்பட்டுள்ளது. தொகுதிகள் பிரிக்கப்படவில்லை. அதேபோல மக்கள் நலக்கூட்டணி, தேமுதிக இடையே தொகுதி உடன்படிக்கை மட்டும் எட்டப்பட்டுள்ளது. இன்னும் யார் யார் எந்த தொகுதியில் போட்டியிடுவது என்று முடிவாகவில்லை. இந்த நிலையில் வழக்கம் போல ஆளுக்கு முதலாக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு விட்டார் ஜெயலலிதா.

அதிமுக கூட்டணி கட்சிகள்

அதிமுக கூட்டணி கட்சிகள்

மதுராந்தகம் (தனி) - செ.கு.தமிழரசன் (இந்திய குடியரசு கட்சி)

திருச்செந்தூர் - சரத்குமார் (சமத்துவ மக்கள் கட்சி)

காங்கேயம் - தனியரசு (தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை)

நாகப்பட்டினம் - தமிமுன் அன்சாரி (மனிதநேய ஜனநாயக கட்சி)

ஒட்டன்சத்திரம் - மனிதநேய ஜனநாயக கட்சி

கடையநல்லூர் - ஷேக் தாவூத் (தமிழ் மாநில முஸ்லிம் லீக்)

திருவாடானை - கருணாஸ் - முக்குலத்தோர் புலிப்படை

வெளியே போய் மீண்டும் வந்த சரத்குமார்

வெளியே போய் மீண்டும் வந்த சரத்குமார்

கடந்த சட்டசபைத் தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சிக்கு 2 சீட் ஒதுக்கப்பட்டது. தென்காசி தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆனால் சரத்குமார். இம்முறை கட்சி இரண்டாக உடைந்தது. அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய சரத்குமார் மீண்டும் கூட்டணிக்கு திரும்பினார். அவருக்கு திருச்செந்தூர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தனியரசு

தனியரசு

தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவைத் தலைவர் தனியரசு 2011ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்து பரமத்தி வேலூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இம்முறை அவருக்கு காங்கேயம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

செ.கு.தமிழரசன்

செ.கு.தமிழரசன்

இந்திய குடியரசுக் கட்சியின் செ.கு. தமிழரசன் தற்போது கே.பி.குப்பம் தொகுதி எம்.எல்.ஏவாக இருக்கிறார். இம்முறை அவருக்கு மதுராந்தகம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

கடையநல்லூர் - ஷேக் தாவூத்

கடையநல்லூர் - ஷேக் தாவூத்

தமிழ் மாநில முஸ்லீம் லீக் தலைவர் ஷேக் தாவூத் கடந்த 18 ஆண்டுகளாகவே அதிமுக ஆதரவாளராக இருக்கிறார். டிவி விவாத நிகழ்ச்சிகளில் அதிமுக ஆதரவாளராக பேசி வந்தார். இந்த நிலையில் அவருக்கு கடையநல்லூர் தொகுதியில் போட்டியிட சீட் ஒதுக்கப்பட்டுள்ளது.

2 சீட் வாங்கிய தமிமுன் அன்சாரி

2 சீட் வாங்கிய தமிமுன் அன்சாரி

2011ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் மனித நேய மக்கள் கட்சி இருந்தது. அந்த கட்சிக்கு ராமநாதபுரம், ஆம்பூர், சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி ஆகிய 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதில் ராமநாதபுரத்தில் ஜவாஹிருல்லாவும், ஆம்பூரில் அஸ்லம்பாஷாவும் வெற்றி பெற்றனர். சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி யில் போட்டியிட்ட தமிமுன் அன்சாரி தோல்வி அடைந்தார்.

மனித நேய ஜனநாயகக் கட்சி

மனித நேய ஜனநாயகக் கட்சி

மனித நேய மக்கள் கட்சியில் இருந்து விலகிய தமிமுன் அன்சாரி மனித நேய ஜனநாயகக் கட்சி என்று புதிதாக தொடங்கினார். இம்முறை அதிமுக கூட்டணியில் இணைந்த தமிமுன் அன்சாரிக்கு நாகப்பட்டினம், ஒட்டன் சத்திரம் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

கருணாஸ்

கருணாஸ்

முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவராக உள்ள நடிகர் கருணாஸ், ஞாயிறன்று சென்னை போயஸ் தோட்டத்தில் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் சட்டசபைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வேன் என்றார். அவருக்கு திருவாடனை தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

நடிகர் சங்கம் டூ சட்டசபை

நடிகர் சங்கம் டூ சட்டசபை

நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கருணாஸ் முதன் முறையாக சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுகிறார். நடிகர் சங்கத்தில் இருந்து சட்டசபைக்கு செல்லும் நடிகர் பட்டியலில் இடம் பெறுவாரா கருணாஸ் பார்க்கலாம்.

English summary
ADMK alliance parties contest 7 constituency in Two leave Symbol.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X