For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஓ.பி.எஸ். முதல்வராக இனி வாய்ப்பே இல்லை.. அன்வர் ராஜா எம்.பி.

ஓ. பன்னீர்செல்வம் இனி முதல்வராக வாய்ப்பே இல்லை என்று அன்வர் ராஜா எம்.பி தெரிவித்துள்ளார்.

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: 122 எம்.எல்.ஏக்களின் ஆதரவுடன் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருக்கும் போது புதிய முதல்வர் பற்றிய பேச்சுக்கே இடமில்லை என்றும் ஓ.பன்னீர்செல்வம்

முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவடைந்ததை அடுத்து அதிமுக இரண்டாக பிளவுபட்டது. இதையடுத்து சசிகலா ஆதரவு எடப்பாடி பழனிச்சாமி முதல்வரார பதவியேற்றார். இதனிடையே காலியாக இருந்த ஆர்.கே.நகர் தொகுதிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதிமுகவின் இரண்டு அணிகளும் இரட்டை இலைக்கு உரிமை கொண்டாடியதால் சின்னம் முடக்கப்பட்டது.

ADMK amma MP Anwar Raja says about TN cm row

அதிமுக அம்மா அணி, அதிமுக புரட்சித் தலைவி அம்மா என்ற பெயரில் இரு அணிகளும் தேர்தலை சந்தித்தன. தேர்தல் பிரசாரம் படு தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக புகார் எழுந்ததால் ஆர்.கே.நகர் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுக்கவும், கட்சியை வழிநடத்தவும் இரு அணிகளும் இணைவதாக முடிவு செய்துள்ளன. இதற்காக இருதரப்பிலும் குழு அமைக்கப்பட உள்ளது. ஓ பன்னீர்செல்வம் ஆதரவு அணியினர் இன்று கட்சியில் இருந்து சசிகலாவை நிரந்தரமாக நீக்க வேண்டும், ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு மாநில அரசு பரிந்துரைக்க வேண்டும் போன்ற கடும் நிபந்தனைகளை முன்வைத்தனர். இதையடுத்து பேச்சுவார்த்தை தொடர்பான அடுத்தகட்ட நகர்வுகளில் தேக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், அதிமுக அம்மா அணியைச் சேர்ந்த ராமநாதபுரம் மக்களவை தொகுதி உறுப்பினர் அன்வர் ராஜா, பன்னீர் செல்வம் முதல்வராக வாய்ப்பே இல்லை என்று தெரிவித்துள்ளார். மேலும், 122 எம்.எல்.ஏக்களின் ஆதரவுடன் பழனிசாமி முதல்வராக இருக்கும் போது புதிய முதல்வர் பற்றிய பேச்சுக்கே இடமில்லை என்றும் கூறியுள்ளார்.

English summary
Ramanathapuram MP Anwar Raja says about TN cm row
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X