For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அதிமுகவைக் கைப்பற்றிய 'மாமா' டிடிவி தினகரன், 'மச்சான்' டாக்டர் வெங்கடேஷ்!

அதிமுக முழுமையாக மன்னார்குடி கும்பலின் வசமாகி விட்டது. மாமன் - மச்சான் ஆன டிடிவி தினகரன், வெங்கடேஷிடம் கட்சியை ஒப்படைத்து விட்டு ஜெயிலுக்குப் போகிறார் சசிகலா.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டு, ஜெயலலிதாவினால் 30 ஆண்டுகாலமாக ராணுவ கட்டுக்கோப்புடன் வளர்க்கப்பட்ட அதிமுக மன்னார்குடிகும்பலின் வசமாகி விட்டது. இது அதிமுக தொண்டர்களை கவலைக்குள்ளாக்கியுள்ளது.

சசிகலாவின் அக்காள் வனிதாமணியின் மகன் டிடிவி தினகரன், சசிகலாவின் அண்ணன் சுந்தரவதனத்தின் மகன் டாக்டர் வெங்கடேஷ் ஆகியோர் கட்சியை கபளீகரம் செய்யத் தொடங்கி பலகாலமாகி விட்டது.

கடந்த 2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கட்சியில் இருந்து ஜெயலலிதாவினால் தூக்கி எறியப்பட்டவர்கள் டிடிவி தினகரன், டாக்டர் வெங்கடேசன். அவர்கள் இருவரையும் கட்சியில் சேர்த்தார் சசிகலா. உடனேயே டிடிவி தினகரனை துணைப்பொதுச்செயலாளராக நியமித்துள்ளார் தற்காலிக பொதுச்செயலாளர் சசிகலா.

சசிகலாவின் சொந்தங்கள்

சசிகலாவின் சொந்தங்கள்

சசிகலாவிற்கு மூத்த சகோதரி வனிதாமணி இவர்களின் மகன்கள் டிடிவி தினகரன், வளர்ப்பு மகன் சுதாகரன், பாஸ்கரன். மூத்த சகோதரர் சுந்தரவதனம் இவரது மகன் டாக்டர் வெங்கடேசன், மகள் அனுராதா இவரைத்தான் டிடிவி தினகரன் திருமணம் செய்துள்ளார். 3வது அண்ணன் வினோதகன் இவரது மகன்கள் தஞ்சையில் உள்ள மகாதேவன், தங்கமணி. 4வது அண்ணன் ஜெயராமன் இவர் இறந்து விட்டார். இவரது மனைவி தான் போயஸ்தோட்டத்தில் சசிகலா உடன் வசித்து வரும் இளவரசி இளவரசி. சசிகலாவின் தம்பியின் பெயர் திவாகரன். இவர் மன்னார்குடியில் வசிக்கிறார்.

அக்காள் மகன்

அக்காள் மகன்

சசிகலாவின் அக்காள் மகன் டிடிவி தினகரன் போயஸ் தோட்டத்து செல்லப்பிள்ளையாக வலம் வந்தவர். இவரது தம்பி சுதாகரனைத்தான் வளர்ப்பு மகனாக தத்து எடுத்து திருமணம் செய்து வைத்தார் ஜெயலலிதா.
இதுவே அவரது அஸ்தமனத்திற்கு அச்சாரமாக அமைந்தது.

பொருளாளர்

பொருளாளர்

டிடிவி தினகரனுக்கு அதிமுகவில் பொருளாளர் பதவி கொடுத்து அழகு பார்த்தார் ஜெயலலிதா. எம்.பி சீட் கொடுத்து டெல்லிக்கு அனுப்பிவைத்தார். டிடிவி தினகரன் மனைவி அனுராதாவை ஜெயா டிவியின் நிர்வாகியாக நியமித்தார். ஆனாலும் அவரது நடவடிக்கைகள் பிடிக்காமல் போகவே கட்சியை விட்டு விலக்கி வைத்தார்.

டாக்டர் வெங்கடேஷ்

டாக்டர் வெங்கடேஷ்

சசிகலாவின் அண்ணன் சுந்தரவதனத்தின் மகனான டாக்டர் வெங்கடேஷ், ஆழ்வார் பேட்டையில் கிளினிக் வைத்து நடத்தி வந்தார். கடந்த 2009ஆம் ஆண்டு அதிமுகவில் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை தொடங்கப்பட்டது. அதன் முதல் மாநிலச் செயலாளராக வெங்கடேஷ் நியமிக்கப்பட்டார். அதிமுகவின் தஞ்சை, திருவாரூர் மாவட்ட பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டார் வெங்கடேஷ். தினகரனுக்கு அடுத்து கட்சியில் செல்வாக்காக இருந்த வெங்கடேஷ், 2010ஆம் ஆண்டில் கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார்.

சதிகாரர்கள் நீக்கம்

சதிகாரர்கள் நீக்கம்

2011ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்த உடன் ஆட்சியையும், கட்சியையும் கைப்பற்ற சதி செய்வதாக கூறி ஜெயலலிதா கட்சியை விட்டே நீக்கினார். துரோகிகள், சதிகாரர்கள் என முத்திரை குத்தப்பட்டு துரத்தப்பட்ட தன்னுடைய உறவினர்களான டிடிவி தினகரனையும் வெங்கடேஷையும் மீண்டும் அதிமுகவில் சேர்த்துள்ளார் சசிகலா.

மாமன் மச்சான்கள் வசம் அதிமுக

மாமன் மச்சான்கள் வசம் அதிமுக

சசிகலாவின் கணவர் நடராஜன், அவரது தம்பி திவாகரன்தான் சசிகலாவை ஆட்டி வைக்கின்றனர் என்று கூறப்பட்டது. ஆனால் அனைத்து சொந்தங்களையும் ஓரங்கட்டி விட்டு டிடிவி தினகரன் அவரது மனைவியின் தம்பி வெங்கடேஷ் ஆகியோர்தான் இப்போது அதிமுகவை கபளீகரம் செய்யப்போகின்றனர். அதற்கு அச்சாரமாகவே இப்போது கட்சியின் பொதுச்செயலாளர் ஆக்கப்பட்டுள்ளார் டிடிவி தினகரன். வெங்கடேஷ் விரைவில் முக்கிய பொறுப்பில் நியமிக்கப்படுவார்.

ஓரங்கட்டப்பட்ட இளவரசி குடும்பம்

ஓரங்கட்டப்பட்ட இளவரசி குடும்பம்

இளவரசியின் உறவினர்கள், மற்ற பங்காளிகளைக்கூட சசிகலாவிடம் ஒண்ட விடாமல் மாமன் மச்சான்கள்தான் சசிகலாவை கடந்த 3 மாதங்களாக ஆட்டி படைத்தனர். இளவரசியின் மகன் விவேக், கடந்த சில ஆண்டுகாலமாக போயஸ்தோட்டத்தில் செல்வாக்குடன் வலம் வந்தார். ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு இப்போது இளவரசி குடும்பத்தைப் பற்றிய சத்தமே காணாமல் போய்விட்டது. இளவரசியும் சிறை செல்லப்போகிறார். எனவே மாமன் மச்சான்கள் ஆட்டம் அதிகரித்து விட்டது என்றே பேசப்படுகிறது.

தொண்டர்கள் மனநிலை

தொண்டர்கள் மனநிலை

சசிகலா சிறை செல்லப்போவதால் உடனடியாக கட்சியை வசப்படுத்த தங்களை கட்சியில் இணைத்துக்கொண்ட வேகத்தில் அதிமுக துணைப்பொதுச்செயலாளராக அறிவிக்க வைத்துள்ளார் டிடிவி தினகரன். இந்த அறிவிப்பு நிர்வாகிகள் மத்தியிலேயே அதிருப்தியை உருவாக்கியுள்ளது. எம்.ஜிஆர், ஜெயலலிதா மீது பக்தி வைத்துள்ள தொண்டர்கள் மனநிலை வேதனையடைந்துள்ளது.

நூற்றாண்டு பிறந்தநாள் விழா

நூற்றாண்டு பிறந்தநாள் விழா

அதிமுகவின் நிறுவனர் எம்ஜிஆரின் நூற்றாண்டு பிறந்தநாள் கொண்டாடப்படும் இந்த வேளையில் மகிழ்ச்சியோடு இருக்க வேண்டிய தொண்டர்கள் ஜெயலலிதா மரணத்தினால் கவலையடைந்துள்ளனர். இப்போது கட்சியும் பிளவு பட்டுள்ளது. மன்னார்குடி கும்பல் அதிமுகவை கபளீகரம் செய்து வருவதும் உண்மை தொண்டர்களை கவலைக்குள்ளாக்கியுள்ளது.

English summary
ADMK has become Sasikala's family party at last with the appointment of TTV Dinakaran.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X