முதல்வர் குணமடைந்தார்… தொண்டர்கள் மகிழ்ச்சி.. உற்சாகம்

சென்னை: தமிழக முதல்வர் உடல் நலக் குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் குணமாகிவிட்டதாக மருத்துவ நிர்வாகம் அறிவித்துள்ளதால் மருத்துவமனை அருகில் குழுமி இருந்த அதிமுக தொண்டர்கள் மகிழ்ச்சி உற்சாகத்தில் கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.

ADMK Cadres excites for recovering their Amma

தமிழக முதல்வர் நேற்று இரவு உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தொடர் சிகிச்சைக்கு பின்னர் முதல்வர் ஜெயலலிதா குணமடைந்துவிட்டார் என்று மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் அவர் வழக்கமான உணவுகளை உட்கொள்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADMK Cadres excites for recovering their Amma

இதனையடுத்து, நேற்று நள்ளிரவில் இருந்து மருத்துவமனை முன்பு அழுது கொண்டும் சோகத்தோடும் குவிந்திருந்த அதிமுக தொண்டர்கள், மருத்துவமனையின் இந்த அறிவிப்பால் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். உற்சாக பெருக்கத்தில் அம்மா வாழ்க; பல்லாண்டு வாழ்க என்று கோஷங்களை எழுப்பிய வண்ணம் உள்ளனர். ஒரு சிலர் முதல்வருக்கு குணமான மகிழ்ச்சியில் அழுது ஆனந்த கண்ணீர் வடித்த வண்ணம் கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.

English summary
ADMK functionaries and cadres are very happy to hear their leader health report in around the hospital.
Please Wait while comments are loading...

Videos