For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆட்சியை கலைக்க திமுகவிற்கு ஆசை.. விருப்பம் நிறைவேறாது.. ஆளுநரை சந்தித்த பின் தம்பிதுரை ஆவேசம்

தமிழகத்தில் நடைபெற்று வரும் ஆட்சியை கலைக்க வேண்டும் என்று திமுக நினைப்பது நிறைவேறாது என்று எம்பி தம்பிதுரை ஆளுநரை சந்தித்தப் பின் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்று, அதிமுக அம்மா கட்சியின் எம்பி தம்பிதுரை ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து பேசினார்.

நம்பிக்கை வாக்கெடுப்பில் லஞ்சம் பெற்ற விவகாரம் தொடர்பாக நேற்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் ஆளுநரை சந்தித்து புகார் அளித்தார்.

இதனைத் தொடர்ந்து தம்பிதுரை எம்பி இன்று ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் தம்பிதுரை பேசியதாவது:

மரியாதை நிமித்தம்

மரியாதை நிமித்தம்

ஆளுநரை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். அவர் என் நண்பர். நட்பின் காரணமாகவே சந்தித்தேன். இந்த சந்திப்பிற்கும் ஸ்டாலின் நேற்று ஆளுநரை சந்தித்ததற்கும் சம்பந்தம் இல்லை.

மறுப்பு

மறுப்பு

லஞ்சம் கொடுத்த விவகாரத்தில் தொடர்புடையதாகக் கூறப்பட்ட சரவணன் எம்எல்ஏ தனக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என்று கூறியிருக்கிறார். ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் புகார் கொடுத்துள்ளார். நாங்கள் எல்லோரும் ஒரே கட்சியை சேர்ந்தவர். அப்படி இருக்கும் போது எம்எல்ஏ ஒருவர் பணம் கொடுத்தார் என்பதை ஏற்க முடியாது.

கவிழ்க்க முடியாது

கவிழ்க்க முடியாது

அதிமுக ஆட்சியை தமிழகத்தில் கலைக்க முடியாது. அது சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது. அடுத்த 4 ஆண்டுகளுக்கும் தொடர்ந்து நடைபெறும். திமுக நினைப்பது போன்று ஆட்சியை கவிழ்க்க முடியாது.

பிளவு கிடையாது

பிளவு கிடையாது

அதிமுகவில் அணி என்பதே கிடையாது. இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்றவர்கள் அனைவரும் ஒரே கட்சியை சேர்ந்தவர்கள். பிரிவு என்பது கிடையாது.

ஒற்றுமை அவசியம்

ஒற்றுமை அவசியம்

ஓபிஎஸ் அணியின் பேச்சுவார்த்தைக் குழுவை கலைத்திருக்கலாம். ஆனால் நாங்கள் கலைக்கவில்லை. அப்படி என்றால் நாங்கள் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம் என்று அர்த்தம். அதிமுகவில் ஒற்றுமை அவசியம் என்று தம்பிதுரை கூறினார்.

English summary
ADMK continue for next 4 years in Tamil Nadu said MP Thambidurai after met governor Vidyasagar Rao at Raj Bhavan in Guindy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X