For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆர்கே நகரில் மோதும் எம்ஜிஆரின் தொப்பி... இரட்டை மின் விளக்கு... "படகோட்டி" படகு!

தீபாவுக்கு படகு சின்னம் ஒதுக்கிக் கொடுக்கப்பட்டுள்ளது. இதை தீபா தரப்பு குஷியுடன் ஏற்றுள்ளதாக தெரிகிறது.

By Rajiv
Google Oneindia Tamil News

சென்னை: எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை தலைவரான ஜெ.தீபாவுக்கு படகு சின்னம் கொடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை தீபா தரப்பு குஷியுடன் ஏற்றுள்ளதாக தெரிகிறது. இது படகோட்டி எம்.ஜி.ஆரை நினைவுபடுத்த உதவும் என்பதால் அவர்கள் மகி்ழ்ச்சியுடன் உள்ளனர்.

தேர்தல் ஆணையம் எதுவும் திட்டமிட்டு செயல்படுகிறதா என்று சந்தேகம் வரும் அளவுக்கு அதிமுகவுக்குத் தொடர்பானவர்கள் விஷயத்தில் நடந்து கொள்கிறார்கள் போலும். அதிமுக தொடர்பான வேட்பாளர்களுக்கு அக்கட்சி மற்றும் அக்கட்சித் தலைவர்கள் தொடர்புடைய சின்னங்களை அடுத்தடுத்து ஒதுக்கி வருகிறார்கள்.

இதன் காரணமாக அதிமுக அம்மா கட்சியான டிடிவி தினகரன் தரப்பு, அதிமுக புரட்சித் தலைவி அம்மா கட்சியான ஓ.பி.எஸ் தரப்பு மற்றும் ஜெயலலிதா அண்ணன் மகள் தீபாவின் எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை ஆகியை சந்தோஷமடைந்துள்ளன.

ஜெயலலிதா அண்ணன் மகள்

ஜெயலலிதா அண்ணன் மகள்

அதிமுக கட்சியானது தற்போது இரண்டு பிரிவாக பிரிந்து இருக்கிறது. ஒரு பிரிவு சசிகலா தலைமையிலும், இன்னொரு பிரிவு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலும் பிரிந்து செயல்படுகின்றன. ஜெயலலிதா தோற்றத்தில் இருப்பதை மட்டுமே பலமாக வைத்து மறுபக்கம் ஜெ. தீபாவும் களம் கண்டுள்ளார்.

எம்ஜிஆர் தொப்பி

எம்ஜிஆர் தொப்பி

டிடிவி தினகரன் தலைமையிலா அதிமுக அம்மா கட்சிக்கு தொப்பி சின்னத்தை ஒதுக்கிக் கொடுத்துள்ளது தேர்தல் ஆணையம். இதையடுத்து எம்.ஜி.ஆர். தொப்பி என்று கூறி தினகரன் தரப்பு பிரசாரம் செய்து வருகிறது. தொப்பியும் எம்ஜிஆர் சின்னம்தான் என்பது அவர்களின் வாதம்.

இரட்டை விளக்கு

இரட்டை விளக்கு

இன்னொரு பக்கம் ஓ.பி.எஸ் தரப்புக்கு இரட்டை விளக்குகளுடன் கூடிய மின் கம்ப சின்னம் தரப்பட்டுள்ளது. இதை அவர்கள் ஜெயலலிதா ஒரு விளக்கு, எம்ஜிஆர் விளக்கு என்று கூறியும், இது இரட்டை இலை போன்ற தோற்றத்தில் இருப்பதையும் வைத்து பிரசாரம் செய்து வருகின்றனர்.

குஷியான தீபா

குஷியான தீபா

இந்த நிலையில் தற்போது ஜெ. தீபாவுக்கு படகு சின்னம் தற்போது ஒதுக்கிக் கொடுக்கப்பட்டுள்ளது. இதை தீபா தரப்பு குஷியுடன் ஏற்றுள்ளதாக தெரிகிறது. காரணம், இது படகோட்டி எம்.ஜி.ஆரை நினைவுபடுத்த உதவும் என்பதால் அவர்கள் மகி்ழ்ச்சியுடன் உள்ளனர்.

பிளான் பண்ணி பன்றாங்களா?

பிளான் பண்ணி பன்றாங்களா?

தீபா தேர்தல் பிரச்சாரத்தின் போது எம்ஜிஆர் ஓட்டிய படகு பெயரைச் சொல்லி எளிதாக வாக்கு சேகரிப்பார். மொத்தத்தில் எம்.ஜி.ஆர். அதிமுக தொடர்புடைய சின்னங்களை இவர்கள் பெற்றுள்ளது திட்டமிட்டு நடந்ததா அல்லது தற்செயலா என்பதுதான் இப்போதைய கேள்விக்குறியாகும்.

English summary
All the ADMK factions have been given party related symbols in the RK Nagar by election today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X